ஒரு அப்பனையே அடித்த மனுஷன், அப்போ நாமெல்லாம் – டிவியில் ஒளிபரப்பபடாத பாலாஜி பற்றிய விஷயத்தை சொன்ன வேல்முருகன்.

0
61742
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் ஒருவர். பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக ரேகா வெளியேறிய நிலையில் கடந்த வாரம் வேல்முருகன் வெளியேற்றப்பட்டு இருந்தார். இப்படி ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற வேல்முருகன் பிக் பாஸில் தன்னை நடத்திய விதம் குறித்தும், அங்கு உள்ள போட்டியாளர்கள் குறித்தும் பேசியுள்ளார். டிப்ளோமேடிக், குரூப்பிஸம், ஃபேவரிடசம் என்கிற வார்த்தைகளுக்கு எல்லாம் எனக்கு அர்த்தம் தெரியாது. நியாயமாக விளையாடி, யாரையும் காயப்படுத்தாமல், என் டாஸ்க்கைச் சரியாகச் செய்ய நினைத்தேன்.

வீடியோவில் 20 : 22 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

பலமுறை என்னை அநியாயமாக நடத்தினார்கள் அந்த இடத்தில் அனிதாவோ, பாலாஜியோ , ஆரியோ இருந்திருந்தால் அவர்கள் பெரிய பிரச்சனை செய்து இருப்பார்கள். ஆனால், அதை நான் செய்யவில்லை. பிக்பாஸ் இல்லத்தில் யாரும் என்னிடம் நெருக்கமாக இல்லை. நானும் கலராக இருந்து, நாலு வார்த்தை இங்கிலீஷ் பேசி இருந்தால் எல்லோருக்கும் நான் நண்பனாகி இருப்பேன் என்னை ஒதுக்கி விட்டார்கள் என் பாடலை கேட்பதற்காக மட்டுமே என்னை பயன்படுத்தினார்கள் என்று கூறியுள்ளார். வேல்முருகன் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது கிளீனிங் டீமில் தலைவராக இருந்த வேல்முருகன் அவரது டீமில் இருந்த பாலாஜி , தூங்கிக்கொண்டிருக்கும்போது எழுப்பியதால் கடுப்பான பாலாஜி தூக்கத்தில் எழுந்து வேலை செய்ய சொல்லாதீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

அப்போது அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால், கிளீனிங் டீமின் தலைவராக இருந்த வேல்முருகன் பாலாஜியிடம் பெரிய பிரச்சினை எதுவும் செய்யவில்லை இதுகுறித்து பேட்டியில் தெரிவித்துள்ள வேல்முருகன் நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எனவே நான் கோபத்தில் ஏதாவது வார்த்தையை விட்டு விடுவேன் அதனால் அந்த இடத்தில் நான் எதுவும் பேசவில்லை. அதேபோல பாலாஜி கடந்து வந்த பாதை டாஸ்கின் போது ஒரு விஷயத்தை சொன்னார் அது நிகழ்ச்சியில் இருக்கிறதா இல்லை எடிட் செய்து விட்டார்களா என்பது தெரியவில்லை ஒருமுறை நான் தூங்கிக்கொண்டு இருக்கும் போது என்னுடைய அப்பா என்னை வந்து அடித்தார்.

This image has an empty alt attribute; its file name is image-3.png

அதன்பின்னர் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரை நான் ஜல்லி கரண்டியால் அடித்து விட்டேன் என்று ஒருநாள் ஒரு அப்பனையே தூங்கிக்கொண்டு இருக்கும்போது அடித்த மனுஷன். அப்படி இருக்கையில் ஒரு வேளை அவர் என் மீது கை வைத்து விட்டால் அது அவருக்குத்தான் கெட்ட பெயர் அது எனக்கு ஒரு பாசிட்டிவ் தான் என்றாலும் என்னதான் இன்னொருவன் கையில் அடி வாங்குவது என்பது அசிங்கம் தானே என்று கூறி உள்ளார் வேலு முருகன்

-விளம்பரம்-

அதேபோல நான் வெளியேறுவதாக கமல் சார் அறிவித்தவுடன் பாலாஜி ஓடிவந்து அஜித்தை தூக்கினார் மனதிற்குள் எவ்வளவு வைத்திருக்கிறார். அது அப்போது காட்டிவிட்டது. அவர் அப்படி செய்தது குறித்து எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால், அதுபற்றி கமன்ட் ஒன்றை படித்தேன். ஏண்டா எழவு வீட்ல போய் ஆழமா சிரிக்கிற மாதிரி இருக்கு என்று போட்டிருந்தார்கள். அதை பார்த்து நான் புரிந்து கொண்டேன் என்று கூறி உள்ளார் வேல் முருகன்.

Advertisement