‘அவன் ரொம்ப நல்லவன்’ பிரதீப் பற்றி பேசிய விசித்ரா, நிக்சன் சொன்ன பதில், கொந்தளிக்கும் ரசிகர்கள்

0
303
- Advertisement -

பிரதீப்பை பற்றி விசித்ரா, நிக்ஷன் பேசியதற்கு கொந்தளித்து நெட்டிசங்கள் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 103 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இன்னும் இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. இதில் யார் டைட்டில் பட்டதை வெற்றி பெறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கடைசி வாரம் என்று சொல்லலாம். நாளை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெறுகிறது.

- Advertisement -

பிக் பாஸ் 7:

தற்போது பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய ஐந்து பேர் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். அதில் பிரதீப் மற்றும் ஐஸ்வர்யா மட்டும் தான் வரவில்லை. பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக தான் விளையாடி வந்தார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா மற்றும் அவருடைய கேங்க் பிரதீப் மீது குற்றம் சாட்டியதால் எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காமல் பிக் பாஸ் மற்றும் கமல் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பி இருந்தார்கள்.

விசித்திரா சொன்னது:

இதனால் ரசிகர்கள் கமலை வறுத்து எடுத்திருந்தார்கள். மேலும், மீண்டும் பிரதீப் பிக் பாஸ் வீட்டுக்குள் வராதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதோடு இந்த சீசன் போட்டியாளர்கள் புகைப்படம் என்று எல்லாருடைய போட்டோக்களுமே இருந்தது. ஆனால், பிரதீப் புகைப்படம் மட்டுமே இல்லை. இதை பார்த்த நிக்சன், இந்த போட்டோவில் பிரதீப் அண்ணா போட்டோவும் இருந்திருக்கலாம் என்று சோகமாக கூறியிருக்கிறார். உடனே விசித்ரா, பிரதீப் ரொம்ப நல்லவன்டா, நேரில் பார்த்து பேசணும். ஒன்றும் சொல்ல மாட்டான் என்று அவருக்கு ஆறுதலாக கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

சென்டிமென்ட் குறும்படம் :

இதை பார்த்து ரசிகர்கள் பலரும் பயங்கரமாக திட்டி வருகிறார்கள். உங்களுக்கு இப்பதான் பிரதீப் நல்லவன்னு தெரியுதா ? என்றெல்லாம் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் சென்டிமென்ட் குறும்படம் என்று பிக் பாஸ் வீட்டுக்குள் ஒளிபரப்பப்பட்டது. அதில் பிரதீப் உடைய சில காட்சிகள் வந்தது. ஒரு நிமிடம் பிரதீப் உடைய எமோஷனல் கிளிப்ஸ் காட்டப்பட்டது. இந்த வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் வருத்தம்:

இதற்கு ரசிகர்கள், பிரதிப் இருந்தால் கண்டிப்பாக அவர் தான் டைட்டில் வின்னர் ஆகியிருப்பார். நீங்க இதற்கு தகுதியானவர் ப்ரோ. மிஸ் யூ பிரதர். ரியல் வின்னர் பிரதீப் என்று ரசிகர்கள் உணர்ச்சி பொங்க பதிவிட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ‘ஆட்டநாயகன் பிரதீப்’ என்ற ஹாஸ்டேக்குகளை எல்லாம் சோசியல் மீடியாவில் தெறிக்க விட்டு வருகிறார்கள். மேலும், நாளை நடக்க இருக்கும் கிராண்ட் பினாவில் பிரதீப் வருவாரா? என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Advertisement