தமிழ் சினிமா உலகில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்தவர் விசித்ரா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். திருமணத்திற்கு பின்பு விசித்ரா சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய குடும்பத்தை மட்டும் கவனித்து வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு விசித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.
அதற்கு பின்பு இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு திறமையாக விளையாடி வருகிறார். பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீனியர் நடிகர், நடிகைகள் வந்தாலே சில வாரங்களில் வெளியேறி விடுவார்கள். ஆனால், விசித்ரா தாக்கு பிடித்துக் கொண்டு பயங்கரமாக விளையாடி வருகிறார். ஒரு சீனியர் நடிகைக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்று சொல்லலாம்.
பிக் பாஸ் 7:
இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட பூகம்பம் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்பமான விஷயத்தை கூறியிருக்கிறார்கள். அதில் விசித்திரா, என் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் என்றால் 2001 ஆம் ஆண்டு நடந்தது தான். தெலுங்கில் பிரபலமான முன்னாடி நடிகர். அவருடைய ஒரு படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் சூட்டிங் கேரளாவில் மலப்புழாவில் நடந்தது. அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தேன். அங்குதான் நான் என்னுடைய வருங்கால கணவரை சந்தித்தேன். அவர் ஜெனரல் மேனேஜராக இருந்தார்.
பூகம்பம் டாஸ்கில் விசித்திரா:
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோ முதல் ஜூனியர் ஆர்டிஸ்ட் வரை என பலருமே என்னை தொல்லை செய்தார்கள். தினமும் இரவு என் அறையின் கதவைத் தட்டி டார்ச்சர் செய்தார்கள். இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று பயத்திலிருந்தேன். என்னுடைய வருங்கால கணவர் தான் உதவி செய்தார். அப்படி இருக்கும்போது ஒரு நாள் படப்பிடிப்பில் ஒருவர் என்னை தவறான இடத்தில் தவறான நோக்கத்தில் கை வைத்தார். இது குறித்து நான் ஸ்டண்ட் மாஸ்டர் இடம் சொன்னபோது அவர் என்னை தான் அடித்தார். அங்கிருந்த இயக்குனர், தயாரிப்பாளர், சக நடிகர்கள் என யாருமே தட்டிக் கேட்கவில்லை.
ரசிகர்கள் ஆதரவு:
இதனால் தான் நான் சினிமாவில் இருந்து விலகி விட்டேன் என்று வேதனையுடன் கூறியிருந்தார். இப்படி இவர் கூறியிருந்தது சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. தற்போது இந்த விவகாரம் வெளியானதை தொடர்ந்து பலரும் விசித்திராவுக்கு குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், விசித்ரா சொல்வதெல்லாம் சுத்தமான பொய்.
பயில்வான் பேட்டி:
2000ம் ஆண்டு நடந்த இந்த விஷயம் பற்றி விசித்திரா இப்போது கூறுவதற்கு காரணம் என்ன? என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும். தற்போது மன்சூர் அலிகான் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருவதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது போன்ற ஒரு கான்செப்ட் பிளான் செய்து வைத்திருக்கிறார்கள்.. விசித்திரா ரூம் ரூமாக மாறி தங்கி இருந்தேன், அதற்கு உதவியது மேனேஜராக இருந்த என்னுடைய கணவர் என்றெல்லாம் சொல்கிறார். ஏன் அவர் அப்போது போலீஸ் காவல்நிலையில் புகார் அளிக்கவில்லை. இப்போது இந்த விஷயத்தை சொல்ல காரணம் என்ன? அந்த நடிகர் யார்? என்பதை சொல்ல தைரியம் இல்லாதவர் இதை ஏன் இப்போது சொல்கிறார்? எல்லாமே பொய். நிகழ்ச்சியில் ஓட்டுக்களை வாங்குவதற்கு தான் விசித்திரா இப்படி எல்லாம் பேசி இருக்கிறார் என்று என்று விமர்சித்து கூறியிருக்கிறார்.