இப்படி கப் வாங்கறதுக்கு அசிங்கப்பட வேண்டியது யார் – மாயா குறித்து விக்ரம் தங்கை போட்ட பதிவு.

0
587
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 80 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் கேப்டன் யாரும் இல்லை. இதனால் போட்டியாளர்கள் குஷி ஆகி விட்டார்கள். அனைவரும் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெற்றது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க்:

இதனால் பிக் பாஸ் வீடே எமோஷனல் ஆகி இருக்கிறது. மணி உடைய பெற்றோர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அதன் பின் தினேஷ் அம்மா, அப்பா வருகிறார்கள்.இதனை அடுத்து விஷ்ணு அம்மா, அர்ச்சனா அம்மா, அப்பா வருகிறார்கள். மேலும், நேற்று நிகழ்ச்சியில் ரவீனாவின் உறவினர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் வெளியில் நடந்து கொண்டிருப்பதை கோட்வோர்டில் சொல்லி இருக்கிறார்கள். இதனால் விதியை மீறி இவர்கள் இருவரும் சொல்லியதால் பிக் பாஸ் அவர்களை உடனடியாகவே வெளியில் அனுப்பி விட்டார்கள்.

விக்ரம் தங்கை சொன்னது:

அதற்குப்பின் மாயாவின் அம்மா வந்திருந்தார். பின் விசித்திரா குடும்பம், நிக்சன் நண்பர், விஜய் வர்மா உறவினர் ஆகியோர் வந்து இருக்கிறார்கள். இதனை அடுத்து விக்ரமின் அம்மா, அப்பா, தங்கை பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். விக்ரமனை கூட்டிக்கொண்டு தனியாக அவர் தங்கை அறிவுரை கூறியிருக்கிறார். அப்போது அவர், பூர்ணிமாவை கூட ஏற்றுக்கொள்வேன். ஆனால், மாயாவை நான் ஏற்க மாட்டேன். உன்னிடம் நன்றாக பேசிவிட்டு உன் முதுகுக்கு பின்னாடி உன்னையே திட்டுகிறார்கள். யாரையும் நம்பாதே, யாருக்காகவும் விளையாடாதே என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

மாயா செய்த வேலை:

இன்னொரு பக்கம், மாயா- பூர்ணிமா இருவருமே விக்ரம் தங்கை பேசியது குறித்து புலம்பி கொண்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் விக்ரம் பெற்றோர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் போதே மாயா அவர்களை கலாய்த்து இருந்தார். பின் கேமரா முன்பு பார்த்து, விக்ரம் பெஸ்ட் என்றும், காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு பொன் குஞ்சி. அந்த காக்கா தண்ணி குடிச்சிட்டு இருக்கு என்று விமர்சித்து பேசி இருக்கிறார். ஏற்கனவே விக்ரமை முதுகெலும்பில்லாதவன், செட் பிராப்பர்ட்டி, கரப்பான் பூச்சி என்றெல்லாம் விமர்சித்து இருந்தார்கள்.

விக்ரம் தங்கை போட்ட பதிவு :

தற்போதும் அவரை மாயா, இந்த வாரம் கண்டிப்பாக அவன் வெளியே போய்விடுவான். வெளியே போய் முகத்தை எங்க வைத்துக் கொள்கிறான் என்று பார்க்கலாம் என்று கிண்டலாக பேசி இருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் சரவணா விக்ரமனின் தங்கை இந்த வீடியோவை பகிர்ந்து ‘இப்படி கப் வாங்கறதுக்கு அசிங்க பட வேண்டியது யாரு. விக்ரம்க்கு பின்னாடி பேசறத பத்தி அவர்டயே சொன்ன உடனே மாயாக்கு என்ன கடுப்பு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement