இப்போ உன்ன செருப்பால தட்டிட்டேன் முடிஞ்சா என்ன அடி – விஜய் மற்றும் விஷ்ணுவிற்கு ஏற்பட்ட சண்டை.

0
592
- Advertisement -

கடந்த ஞாயிற்று்கிழமை அன்று படு கோலாகலமாக துவங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது 4 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது.இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். தற்போது 18 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கடந்த ஒரு நாளைக்கு முன்பு கதை சொல்லும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர் யாராவது ஒரு போட்டியாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் பின்னர் திரையில் கொடுக்கப்படும் கிசுகிசுக்களை வைத்து அவர்களை பற்றி கதை சொல்ல வேண்டும் என்பதே அந்த டாஸ்க். இப்படி ஒரு நிலையில் நேற்றைய எபிசோடில் வழக்கம் போல போட்டியாளர்கள் மத்தியில் ஒரு சில விவாதங்கள் சென்று கொண்டு இருந்தது.

- Advertisement -

நேற்றய நிகழ்ச்சியில் Know Your Housmates என்ற டாஸ்க்கின் தொடர்ச்சி துவங்கியது. அதில் சமூக வலைதளத்தில் தான் ஏன் பிரபலம் என்று போட்டியாளர் தனது சக போட்டியாளருடன் விவாதிக்க வேண்டும். விவாகத்தில் யார் வெல்கிறார்களோ அவர்கள் Verified செய்யப்படுவார்கள். அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், மணி சந்திரா ஆகியோர் இந்த டாஸ்கில் வெற்றி பெற்றனர்.

நேற்றய நிகழ்ச்சியில் பிக் பாஸ் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார். அந்த டாஸ்கில் தோற்கும் பட்சத்தில் போட்டியாளர்களின் பொருட்கள் எடுத்து செல்லப்படும் என்றும் அறிவித்து இருந்தார். அப்போது பிரதீப் ‘பெண்களின் மேக்கப் பொருட்கள் எடுத்து சென்று விடுவார்கள். நாம் அவர்களின் உண்மையான முகத்தை பார்க்கலாம் என்று கூறி இருந்தார். ஆனால், இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் வென்றார்கள்.

-விளம்பரம்-

இருப்பினும் பிரதீப் கூறிய விஷயத்தால் கடுப்பான மாயா, அக்ஷயா, பூர்ணிமா ஆகியோர் நாம் ஏன் மேக்கப் இல்லாமல் இருக்க கூடாது. பிரதீப்பிற்கு நாம் மேக்கப் இல்லாமல் காட்டுவோம் என்று வேண்டுமென்றே மேக்கப்பை கலைத்தனர். இப்படியாக நேற்றய எபிசோடில் பிரதீப் டார்கெட் செய்யப்பட இன்று வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவிலும் பிரதீப் மற்றும் விஜய் வர்மாவிற்கு வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது.

அதில் ‘பிரதீப் என் மீது ஷூவை இடித்துவிட்டு போனார். எனக்கு திடீரென்று கோபம் வந்து நான் கையை ஓங்கினால் ‘மூக்கு வாய் எல்லாம் உடைந்துவிடும். என் மீது பாசமான பசங்க எல்லாம் வெளியில் இருக்கிறார்கள். நீ வெளியில் போனால் ஏதாவது பண்ணிவிடுவார்கள் என்று மிரட்டினார். உடனே விஷ்ணு ‘உன்னை நான் செருப்பால தட்டிவிட்டுட்டேன் முடித்தால் என்னை அடி என்று சொல்ல நீ செருப்பால தட்டி பாரு என்று விஜய்யும் கூறியுள்ளார்.

Advertisement