பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எத்தனை வாரிசு நடிகர் நடிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் விஜயலட்சுமியும் ஒருவர் தான். இவர் திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். இவர் 2007 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தின் மூலம் நடிகையாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், சரோஜா, கற்றது களவு போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி உடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார் விஜயலட்சுமி. ஆனால், அந்த சீசனில் இவர் பைனல் வரை வர முடியவில்லை. இதை தொடர்ந்து இவர் ஒரு சில சீரியல்களில் கூட நடித்து இருந்தார். ஆனால், அந்த தொடரும் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதை தொடர்ந்து இவர் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதையும் பாருங்க : கடலில் பரத கலை, டிடி அக்கா பிரியதர்ஷினியை அடித்து சென்ற அலை – வைரலாகும் வீடியோ (தேவையா இது என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்)
பிக் பாஸ் To சர்வைவர் :
சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியிலும் விஜயலட்சுமி பங்கேற்றிருந்தார்.இந்த நிகழ்ச்சியில் 16 பேர்கள் கலந்து கொண்டு காடர்கள், வேடர்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பல சவால்கள் கொடுக்கப்பட்டது. கடுமையான பல போட்டிகள், சவால்கள் என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது. உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்ற அடிப்படையில் இந்த கேம்மை டெலிகாஸ்ட் செய்து இருந்தார்கள்.
சர்வைவர் பட்டத்தை வென்ற விஜி :
பின் அனைவரும் எதிர்பார்த்த 90 நாட்கள் சர்வைவர் முடிவில் விஜயலட்சுமி டைட்டிலை பெற்றது மிக பெரிய வியப்பாக இருந்தது. இதில் ஆண்களுக்கு நிகராக போட்டியிட்டு ஒரு கோடியை விஜி தட்டிச் சென்றார். இதற்காக இவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. விஜயலக்ஷ்மி தனது பள்ளி பருவ தோழரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெரோஸ் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜி பகிர்ந்த வீடியோ :
திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஒரு குழந்தைக்கு தாயான போதிலும் தற்போதும் fit and cute ஆக இருந்து வரும் விஜய் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடமானடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு பெண் ஒருவர் ‘இந்த ஆட்டம் தேவையா ஒரு அம்மாவா இருக்க’ என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த விஜயலட்சுமி ‘அப்போ அம்மா அண்ணா மூலைல உக்காந்து அழனுமா ?
நீ பண்ணு உனக்கு சிலை வைப்பாங்க :
ஐயோ, அவ்வளவுதான் என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு இனிமே எல்லாருக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன் நான் ஒரு தியாகினு. அத நீ பண்ணு உனக்கு சிலை வைப்பாங்க, தியாக செம்மல்னு. எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது குழந்தை பெற்ற பல அம்மாக்களுக்கு வாழ்க்கை இருக்கிறது. அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்வார்கள். அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிவார்கள். உன்ன மாதிரி ஆளுங்களால தான் நிறைய பொண்ணுங்க டிப்ரஷன்ல இருக்காங்க. மற்றவர்களை எடை போடுவதை நிறுத்துங்கள். நீங்க குடும்ப குத்து விளக்காக இல்லை இதெல்லாம் என்னால பண்ண முடியாதுன்னு ஒரு பொறாமைல கமெண்ட் பண்ணி இருக்கீங்களான்னு தெரியல மேடம் எது எப்படியோ உன் அட்வைஸ் கூந்தலை நீங்களே பின்னி பூ வைத்து கொள்ளவும்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.