பிக் பாஸ் நிகழ்ச்சி பரப்ப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. செமி பைனலை நோக்கி சென்றுகொண்டிருக்கும் முக்கியமான கட்டத்தில் இந்த வாரத்திற்கான ஏவிக்ஷனில் சென்ராயன், ஜனனி, மும்தாஜ், ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் ஐஸ்ஸ்வர்யா வெளியேற்றபட்டுள்ளார் என்று ஏற்கனவே சில தகவல்களும் வெளியாகி இருந்தது.
இத்தனை நாட்கள் ஐஸ்வர்யா எப்போது நாமினேஷனில் வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த வாரம் ஐஸ்வர்யாவை எலிமினேட் செய்துள்ளனர். அதுபோக விஜயலக்ஷ்மி தவிர ஏவிக்ஷனில் இருந்த மற்ற போட்டியாளர்கள் அனைவருமே ஒரு கடுமையான போட்டியாளர்கள் தான். விஜயலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து 3 வாரங்கள் தான் ஆகியுள்ளது. அதனால் அவர் மக்களின் அபிமானத்தை அந்த அளவிற்கு பெற்றிருக்கமாட்டார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், இந்த வாரம் நடந்த வாக்கெடுப்பில் விஜயலக்ஷ்மிக்கு தான் அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது இத்தனை நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த சீனியர் போட்டியாளர்களை விட விஜயலக்ஷ்மிக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருக்கிறதா என்ற எண்ணம் தோன்றுகிறது.
இந்த நிகழ்ச்சியில் வந்த நாளில் இருந்தே ஐஸ்வர்யாவிடமும், மும்தாஜிடமும் தைரியமாக பேசி வருகிறார் விஜயலக்ஷ்மி. ஆனால், சற்று ஓவர் ஆக்ட்டிங் செய்து வருகிறார் என்பது தான் இவரது குறையாக இருந்து வருகிறது. தற்போது விஜயலக்ஷ்மிக்கு கிடைத்த வாக்குககளை வைத்து பார்க்கும் போது இனி வரும் வாரங்களில் மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு கடுமையான போட்டியாளராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.