இது உங்களை கொன்றுவிடும் – கண்ணணீர் மல்க விஜயலஷ்மி வெளியிட்ட வீடியோ.

0
4140
- Advertisement -

நடிகை விஜயலட்சுமி, 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 28’ படத்தின் மூலம் அறிமுகமானார் விஜயலக்ஷ்மி. அதன் பின்னர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். இவர் தனது பள்ளி பருவ தோழரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. மேலும், விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ்.

-விளம்பரம்-

விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ், பண்டிகை என்ற படத்தை கூட இயக்கி இருந்தார். மேலும், நடிகை விஜயலக்ஷ்மி விஜய் தொலைக்காட்சில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்கின் போது இவருக்கும் ஐஸ்வர்யாவிற்கு ஏற்பட்ட மோதல் அப்போது படு பரபரப்பாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரரும் விஜயலக்ஷ்மி தொடர்ந்து நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜயலஷ்மி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், மன அழுத்தம் உங்களை கொன்றுவிடும் அனைவரும் ஒரு மிகப் பெரிய யுத்தமே சென்றுகொண்டிருக்கும். அது எவ்வளவு பெரிய சண்டை என்பது தெரியும். ஆனால், அந்த சாத்தானை வெற்றிபெற செய்யாதீர்கள் உங்களுக்குள் இருக்கும் தேவதை அதனை வெள்ளை விடுங்கள் கண்ணீரை துடைத்து உங்களை நேசியுங்கள்.

நடிகை விஜயலக்ஷ்மி இப்படி ஒரு வீடீயோவை பதிவிட்டதற்கு காரணமே பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் . தோனி படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்த சுஷாந்த் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இதை தொரடந்து பல்வேறு நடிகர் நடிகைகளும் மன அழுத்தம் குறித்து வீடியோகளை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகை சஞ்சனா சிங் மற்றும் ரேஷ்மா இணைந்து மன அழுத்தம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement