விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார், அவரும் ஒரு சினிமா பிரபலம் தான்.
நடிகை விஜயலட்சுமி, 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 28’ படத்தின் மூலம் அறிமுகமானார் விஜயலக்ஷ்மி. அதன் பின்னர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.
இதையும் பாருங்க : ரசிகர் கேட்டதால் ஜிம் உடை செல்ஃபி புகைப்டத்தை மீண்டும் பதிவிட்ட ஷாலு.! வாய் பிளந்த ரசிகர்.!
விஜயலட்சுமியின் தங்கையும் இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகளான நிரஞ்சனி பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிகரம் தோடு, காவிய தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
பார்ப்பதற்கு அச்சு அசலாக விஜயலக்ஷ்மி போல இருக்கும் நிரஞ்சனி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள போட்டியாளர்கள் குறித்தும் ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டது.