பிறந்தநாள் கொண்டாடும் பிக் பாஸ் விஜியின் தங்கை – அட, இவங்க இந்த படத்துல நடிச்சவங்க தான்.

0
1543
viji

தமிழ் சினிமாவில் எத்தனையோ பிரபலங்களின் வாரிசுகள் நடிகர்களாக ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான விஜயலக்ஷ்மியும் ஒருவர். நடிகை விஜயலட்சுமி, 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 28’ படத்தின் மூலம் அறிமுகமானார் விஜயலக்ஷ்மி. அதன் பின்னர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.

Kannum Kannum Kollaiyadithaal Ennai Vittu song Dulquer Ritu Varma

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார், அவரும் ஒரு சினிமா பிரபலம் தான்.

- Advertisement -

நடிகை விஜயலட்சுமியின் தங்கையும் இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகளான நிரஞ்சனி பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிகரம் தோடு, காவிய தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

அவ்வளவு ஏன் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் ரக்ஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நிரஞ்சனி. மேலும், இவருக்கு இன்று (ஜூன் 8) பிறந்தநாள் என்பதால் நடிகை விஜயலகஷ்மி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement