அந்நியன் பட Ideologyயை குறை சொன்ன விக்ரமன் – Mute செய்யப்பட்ட அந்த வார்த்தை இதுதானா ? விமர்சிக்கும் நெட்டிசன்கள்.

0
442
vikraman
- Advertisement -

டாஸ்க் குறித்து விக்ரமன்-மணிகண்டன் இடையே ஏற்பட்டு இருக்கும் வாக்குவாதம் குறித்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 61 நாட்களை கடந்து இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 8 போட்டியாளர்கள் போக தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது. அதற்குப் பிறகு விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார்.

- Advertisement -

விக்ரமன் குறித்த தகவல்:

தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து விக்ரமனுக்கு அதிக ஆதரவு ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள். இவர் எந்த ப்ரச்சனை என்றாலும் ஓரம் நிற்காமல் வாதம் செய்து வருகிறார். இதனாலே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இவர் நடிகர் ஆரி போல் முயற்சி செய்வதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

பேண்டஸி டாஸ்க்:

அதே சமயம் இவர் சேப் ஆகவும் விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் டாஸ்க் குறித்து விக்ரமன் பேசி இருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, இந்த வாரம் நிகழ்ச்சியில் பேண்டஸி டாஸ்க் பிக் பாஸ் கொடுத்திருந்தார். இதில் போட்டியாளர்களும் சினிமா பிரபலங்களின் கெட்டப்பில் வேடமடைந்து நடித்திருந்தார்கள். அந்த வகையில் விக்ரமனுக்கு அன்னியன் கதாபாத்திரம் கன்னியன் என்ற பெயரில் கொடுக்கப்பட்டிருந்தது. டாஸ்க் முடிந்து ஒவ்வொருவருக்கும் பரிசு கொடுக்கும் விழாவும் ஏற்படுத்தி இருந்தார்கள்.

-விளம்பரம்-

டாஸ்க் குறித்து விக்ரமன் சொன்னது:

அப்போது யார் சரியாக செய்யவில்லை? என்று கேட்டதற்கு மணி, விக்ரமன்தான் சரியாக செய்யவில்லை. இதே எனக்கு அன்னியன் கதாபாத்திரம் கொடுத்திருந்தால் இந்நேரம் நான் கோல்ட், சில்வர் என்று ஏதாவது ஒரு மெடலைபெற்றிருப்பேன் என்று கூறியிருந்தார். உடனே விக்ரமன், நீங்கள் அதைப் பற்றி பேசாதீர்கள். எனக்கு அந்த கதாபாத்திரத்தில் உடன்பாடு இல்லை என்று சொல்லி ஒரு பீப் சவுண்ட் போட்ட வார்த்தை வருகிறது.

பிராமணர்கள் பற்றி பேசினாரா விக்ரமன் :

அதற்கு மணியும், நீங்கள் அதைப் பற்றி எல்லாம் பேச தேவையில்லை. டாஸ்கை பற்றி மட்டும் பேசுங்கள் என்று பீப் சவுண்ட் வருது. தற்போது இந்த ப்ரோமோ வீடியோ தான் வெளியாகி இருக்கிறது.இதைப் பார்த்த நெட்டிசன்கள், ஒருவேளை விக்ரமன் அந்நியன் படத்தில் வரும் பிராமணர்களை பிடிக்கவில்லை என்று தான் கூறியிருக்கிறாரோ? அதற்குதான் மணி பதிலளித்திருக்கிறாரோ? என்றும் கூறுகிறார்கள்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

அது மட்டும் இல்லாமல் கொடுத்த டாஸ்கை விக்ரமன் சரியாக செய்யவில்லை இப்படி தான் பேசுவார். ஒரு பேண்டஸி ரோலுக்கு கூட ஐடியாலஜி பத்தி பேசுறாரு என்று கூறியிருக்கிறார்க. இன்னொரு சிலர், அவர் எப்போதும் கருத்து தெரிவிப்பவர். அவருடைய கருத்தில் சரியாகத்தான் இருக்கிறார் என்று விக்ரமனுக்கு ஆதரவாகும் பேசியிருக்கிறார்கள். ஆக மொத்தம் நிகழ்ச்சியில் விக்ரமன் பிராமணர்களை பற்றி கூறினாரா? இல்லை மணிகண்டன் நடித்த நந்தமூரி பாலகிருஷ்ணா கதாபாத்திரத்தை பற்றி பேசி இருக்கிறாரா? என்பது தெரியவில்லை.

Advertisement