அவர் ஜெயிச்சா சமூகத்துக்கு எவ்ளோ பெரிய ஆபத்து ஆகிடும்னு பயந்தேன், அதே மாதிரி ஆகிடிச்சி. அசீம் வெற்றி குறித்து விக்ரமன்.

0
828
vikraman
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன்கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறிஇருந்தனர். இறுதி வாரத்தில் கதிரவன், அமுதவாணன் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 5 பேர் மட்டும் இறுதி வாரத்தில் இருந்தனர்.

-விளம்பரம்-

பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறிய நிலையில் மைனா நந்தினி கடைசி போட்டியாளராக வெளியேற்றப்பட்டார்.இதன் மூலம் இந்த சீசனில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி ஆகிஇருந்தனர். ஒருபுறம் அசின் வெல்வார் என்றும் மறுபுறம் விக்ரமன் வெல்வார் என்றும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீசன் பட்டத்தை அசீம் வென்றார்.

- Advertisement -

விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து இருக்கின்றனர்.

இவரை தொடர்ந்து விக்ரமன் இரண்டாம் இடமும் ஷிவினுக்கு மூன்றாம் இடமும் வழங்கப்பட்டது. முதல் இடத்தை பிடித்த அஸீமிற்கு 5000000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. ஆனால், விக்ரமன் தான் இந்த சீசனில் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்ரமன் பேசுகையில் பிக் பாஸ்க்கு பின்னர் நான் வெளியில் வந்ததும் எனக்கு ஒரு வீடியோவை காண்பித்தார்கள்.

-விளம்பரம்-

அதில் பொங்கல் பண்டிகை என்று கோலத்தில் அறம் வெல்லும் என்று எழுதி இருந்தார்கள் அதை கண்டதும் நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்று நான் மகிழ்ச்சி அடைந்தேன் என்று கூறியிருக்கிறார். அதேபோல அசின் குறித்து பேசிய விக்ரமன் மக்கள் அளித்த வாக்கிற்கும் இந்த ரிசல்ட் இருக்கும் சம்பந்தம் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்த மக்கள் எல்லோரும் செல் போன் கூட இல்லாத எளிய மக்கள்.

அவர்கள் எப்படி போய் ஆன்லைனில் வாக்களிப்பார்கள். எனவே, மக்கள் ஆதரவிற்கும் இந்த தீர்ப்பிற்கு தொடர்பு இல்லை என்று நான் நினைக்கிறேன். அதனால் தான் அறம் வெல்லும் என்று நான் சொன்னேன், கமல் அண்ணனும் அதே தான் சொன்னார். அதே போல அசீம் ஜெயித்தால் இந்த சமூகத்தில் ஒரு தவறான பிரதிபல்ப்பை ஏற்படுத்திவிடும் அது ஆபத்து என்று நான் நினைத்தேன். அசீம் உள்ளே எப்படி இருந்தார் என்பதை வைத்து தான் அவருக்கு #AbuserAzeem என்ற பெயரை கொடுத்து இருக்கிறார்கள்.

Advertisement