லண்டன் வாழ் பெண் வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் – தனது பக்க ஆதாரத்தை வெளியிட்டு விக்ரமன் விளக்கம்.

0
1669
- Advertisement -

தன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு விக்ரமன் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர். இவர் முதலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். பின் இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது. அதற்குப் பிறகு விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். பின் இவர் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் விக்ரமன் பிரபலமாகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தான் விக்ரமன் மீது கிருபா என்பவர் புகார் கொடுத்து இருந்தார்.

- Advertisement -

அதாவது, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் கிருபா முனுசாமி. இவரை விக்ரமன் காதலித்து ஏமாற்றியதாகவும், இவரிடம் விக்ரமன் காசு வாங்கி ஏமாற்றியதாகவும், விக்ரமன் ஐ லவ் யூ சொன்ன ஸ்கிரீன்ஷாட்டையும் வெளியிட்டு சோசியல் மீடியாவில் பரபரப்பு அடைந்தார். இந்நிலையில் தன் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விக்ரமன் விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்.

அதில் அவர், என் மீது கிருபா முனுசாமி என்பவர் கூறிய அத்தனை குற்றச்சாட்டுகளும் நான் மறுக்கிறேன். ஒரு நாணயம் என்றிருந்தால் அதற்கு இரண்டு பக்கமும் இருக்கும். என்னுடைய பக்கத்தையும் கேளுங்கள், இதில் பாதிக்கப்பட்டவன் என்றால் அது நான் மட்டும்தான். என் மீது பழி சுமத்த வேண்டும் என்ற கிருபா இப்படி எல்லாம் செய்கிறார் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் 2020ல் நாங்கள் இருவரும் பழகினோம்.

-விளம்பரம்-

அவர் பிஹெச்டி படிப்புக்காக சென்றிருந்தார். அப்போது அவரிடம் எனது தேவைகளுக்காக பணம் வாங்கியது உண்மைதான். ஆனால், அவருக்கு வாக்கு கொடுத்ததை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி முடித்ததும் அதில் கிடைத்த பணத்தையும் திருப்பி தந்துவிட்டேன். அதற்கான ஸ்கிரீன்ஷாட்டையும் இதோ இணைத்து இருக்கிறேன். இதில் 2022 ஆம் ஆண்டு ஜூன் 15ல் கிருபா எனக்கு எழுதிய காதல் கடிதத்தையும் இணைத்துள்ளேன்.

நீங்களே இந்த காதல் கடிதத்தை படித்து பாருங்கள். மோசடி செய்பவனை பார்த்து எந்த பெண்ணாவது இப்படி ஒரு காதல் கடிதத்தை எழுதுவாரா? என்று கூறி விக்ரமன் அந்த கடிதத்தையும் கிருபாவுக்கு திருப்பி அனுப்பிய பணத்தையும் ஸ்கிரீன்ஷாட் இணைத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விக்ரமன் கிருபாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற மறுத்த பிறகு தான் இவர் இப்படி அவதூறாக விக்ரமன் குறித்து குற்றசாட்டுகளை வைத்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கிருபா மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement