டெல்லியில் பிரபல விழாவில் விக்ரமனை கவுரவித்து திருமா – அதுவும் என்ன நிகழ்ச்சியில் தெரியுமா ?

0
522
Vikraman
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

- Advertisement -

தோற்றாலும் மக்களிடம் வெற்றி :

இந்த சீசனில் பலரும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது பெருத்த அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. எனவே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கூட விக்கிரமனுக்கு அதிகளவு ரசிகர்களிடம் இருந்து ஆதரவானது கிடைத்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் அவர் பிக் பாஸ் வீட்டில் பெரியார்ம், அண்ணா, அம்பேத்கார் போன்றவர்களின் முப்போக்கான கருத்துக்களை பேசியதும், சக போட்டியாளர்களிடம் பணிவாக நடந்து கொண்ட விதமும் தான்.

பிற்போக்கு கருத்துக்களை எதிர்த்த விக்ரமன் :

உருவத்தை கேலி செய்வது, பாலினத்தை கேலி செய்வது, செய்யும் தொழிலை கேலி செய்து பேசும் போட்டியாளர்களை தொடர்ந்து தட்டிக்கொண்டே வந்தார். அதே போல பிக் பாஸ் வீட்டில் ஜி பி முத்து போன்ற போட்டியாளர்கள் பெண்கள் என்றால் இந்த வேலை செய்ய வேண்டும் என்று சொன்னதும், பெண்ணாக இருந்து கொண்டு பாத்திரம் கழுவ தெரியாத என கூறியது என பெண்களுக்கு எதிராக யாராவது பேசினால் அவர்களுடன் விவாதத்தில் இறங்கி எதிர்த்து பேசினார் விக்ரமன்.

-விளம்பரம்-

அசீமை எதிர்த்த போட்டியாளர் :

அதே போல பிக் பாஸ் வீட்டில் மற்றவர்களை ஒருமையில் பேசுவதும், பல இடங்களில் போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவதுமாக இருந்த அசீமை தொடக்கம் முதல் முடிவு வரையில் தொடந்து விமர்சித்து கொண்டே வந்தார். அதே போல பல பிற்போக்கு தனமான கருத்துக்களை நேரடியாகவே எதிர்த்தார் விக்ரமன். இதனால் மக்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு பெருகியது. இதன் காரணத்தினால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த விக்ரமனிடம் பேட்டி எடுக்க ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தான் தற்போது டெல்லியில் உள்ள தமிழ் தங்கம் விக்ரமனை பாராட்டியுள்ளது.

டெல்லி தமிழ் சங்கம் விழா :

அதாவது சமீபத்தில் டெல்லி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட விக்ரமனுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. அதோடு இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், விசிக பொதுச்செயலாளாரான ரவிக்குமார் மற்றும் தமிழ் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்த்து கொண்டனர். இந்த தகவல் வைரலாக நிலையில் ரசிகர்கள் பலரும் விக்ரமனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்

Advertisement