பிக் பாஸுக்கு பின் தன் தலைவரை சந்தித்த விக்ரமன், அவர் கொடுத்த பரிசு – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

0
756
vikraman
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறிஇருந்தனர். இறுதி வாரத்தில் கதிரவன், அமுதவாணன் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 5 பேர் மட்டும் இறுதி வாரத்தில் இருந்தனர்.

-விளம்பரம்-

பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறிய நிலையில் மைனா நந்தினி கடைசி போட்டியாளராக வெளியேற்றப்பட்டார்.இதன் மூலம் இந்த சீசனில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி ஆகிஇருந்தனர். ஒருபுறம் அசின் வெல்வார் என்றும் மறுபுறம் விக்ரமன் வெல்வார் என்றும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீசன் பட்டத்தை அசீம் வென்றார்.

- Advertisement -

விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து இருக்கின்றனர்.

இந்த சீசனில் பங்கேற்ற விக்ரமுக்கு தொடக்கத்தில் அதிகமான ரசிகர் பட்டாளம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். டாஸ்க்கிலும் குறைவான பங்களிப்பே கொடுத்து வந்தார். ஆனால், நாட்கள் போக போக பல சமுதாய கருத்துக்களை சொல்லியதோடு, எந்த ஒரு இடத்திலும் சமநிலை தவறாமல் கண்ணியமாக நடந்துகொண்டார். இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து இவர் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த பிக் பாஸின் கடைசி வாரத்தில் விக்ரமனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். திருமாவளவனின் இந்த பதிவை சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் அரசியல் கலக்க வேண்டாம் என்று பலரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.

இதுவரை எந்த சீசனிலும் அரசியல் கலக்காத நிலையில் முதல் முறையாக இந்த சீசனில் அரசியல் கலந்ததால் தான் விக்ரமனுக்கு தோல்வி ஏற்பட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக தொல் திருமாவளவன் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், ‘அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த தம்பி விக்ரமன் அவர்களை வரவேற்று வாழ்த்துகிறேன்.

பொழுதுபோக்கு தளம் எனிலும் அதனை கருத்தியல் களமாக்கிய சாதனையை பாராட்டினேன். நீங்கள் டைட்டில் வின்னர் அல்ல, டோட்டல் வின்னர் என ஆறத் தழுவி மெச்சினேன். ஆடை போர்த்தி அரவேந்தன் சிலை பரிசளித்தேன்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் தலைவரே நீங்கள் விக்ரமன் பிக்பாஸுக்குள் இருக்கும்போது அவருக்காக ஓட்டு கேட்காமல் இருந்திருந்தாலே அவர் ஜெயித்து இருப்பார் என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement