அட, விஜய் டிவில மட்டுமில்ல சன் டிவி சீரியல்லயும் நடித்துள்ள விக்ரமன்- அதுவும் பாவனி கூடவே நடிச்சிருக்காரே.

0
415
vikraman
- Advertisement -

விஜய் டிவியில் ஹீரோவாக நடித்து தற்போது பிக் பாஸில் போட்டியாளராக களமிறங்கி இருக்கும் விக்ரமன் குறித்து பலரும் அறியாத சில விஷயங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கி 5 வாரங்களை கடந்து இருக்கிறது. இதுவரை ஜிபி முத்து, மெட்டி ஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, vj மகேஸ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

பொதுவாகவே பிக் பாஸ் குழு விஜய் டிவி பிரபலங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தரும். அந்த வகையில் விக்ரமனும் விஜய் டிவி பிரபலம் தான் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

விக்ரமன் குறித்த தகவல்:

இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த சீரியலை சுந்தர் கே விஜயன் இயக்கியிருந்தார். நடிகர் சரத்குமாரின் நிறுவனம் இந்த சீரியலை தயாரித்திருந்தது. இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது.

விசிக மாநில செய்தி வாசிப்பாளர்:

இந்த சீரியலில் விக்ரமனுடன் மதுமிலா நடித்திருந்தார். ஆரம்பத்தில் இந்த சீரியல் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.இந்த சீரியல் வெறும் 29 எபிசோடுகள் மட்டும்மே ஒளிபரப்பானது. பின் இடையில் சீரியல் டிஆர்பி ரேட்டிங் குறைந்ததால் இந்த சீரியலை விரைவிலேயே நிறுத்திவிட்டனர். ஆனால், இவர் இந்த தொடரை போல சன் தொலைக்காட்சியிலும் ஒரு தொடரில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சன் டிவி தொடர் :

ஆம், சன் தொலைக்காட்சியில்  EMI தவணை முறை வாழ்க்கை என்ற தொடரில் நடித்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி ஒளிபரப்பான இந்த தொடர் 104 எபிசோடுகள் மட்டுமே ஓடியது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதே தொடரில் பிக் பாஸ் புகழ் பாவனியும் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி விக்ரமன் நடித்த இரண்டு சீரியலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாமலேயே போய்விட்டது.

Advertisement