பிக் பாஸ் விக்ரமனின் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் தற்போது அவரின் மனைவி விளக்கம் அளித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர். முதலில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார். அதன்பின், கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அதற்குப் பிறகுதான் விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருந்தார். அதன் மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் விக்ரமன் தனக்கு என ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
பிக் பாஸ் விக்ரமன்:
இதற்கிடையே இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ப்ரீத்தி கரிகாலன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் சென்னையில் எளிமையாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில், விக்ரமன் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஐயப்பன் தாங்கல் குடியிருப்பு பகுதியில் கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விக்ரமன் தங்கி இருந்திருக்கிறார். அந்த குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு சுற்றிக் கொண்டிருந்துள்ளார். மேலும், அந்த ஆண் குடியிருப்பு பகுதியில் தனிமையில் உள்ளவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பிடிபட்ட அந்த நபர் விக்ரமன் தான்:
ஒரு நாள் 23 வயது நபரிடம் அந்த பெண் வேடமிட்ட ஆண் பாலியல் தொல்லை கொடுத்தபோது, பலர் சுற்றி வளைத்து பிடித்துள்ளார்கள். அது மட்டும் இல்லாமல், வீடியோவும் எடுத்துள்ளார்கள். அப்போது தான் அந்த நபர் பிக் பாஸ் பிரபலம் விக்ரமன் என்று தெரிய வந்துள்ளது. அதற்க்கு பிறகு குடியிருப்பு வாசிகளே அவரை வெளியே அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்குப்பின் விக்ரமன் அந்த வீடியோவை எடுத்தவர்களை மிரட்டி அழித்ததாகவும், அதற்குப் பெரிய தொகை மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விக்ரமன் விளக்கம்:
தற்போது விக்ரமன் குறித்த அந்த வீடியோ வெளியானதால் விக்ரமனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இது தொடர்பாக விக்ரமன் தனது எக்ஸ் பக்கத்தில், இது உண்மைச் சம்பவம் இல்லை என்றும், சினிமா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து, அடிப்படை ஆதாரம் இன்றி, உண்மைத் தன்மையை ஆராயாமல் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது விக்ரமன் குறித்த இந்த செய்தி தான் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் விக்ரமனின் மனைவி இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=VIXzM__8D6s
விக்ரமனின் மனைவி விளக்கம்:
அதில், நாங்கள் முன்பு தங்கி இருந்த குடியிருப்பில் ஷூட்டிங் சம்பந்தமாக வீடியோ ஒன்று எடுக்க வேண்டி இருந்தது. நான் வெளியூரில் இருந்தபோது எடுத்த வீடியோ அது. நான் படம் ஒன்றை எடுக்கிறேன். அதில் நடிப்பதற்காக தான் அவரை இதுபோன்ற வீடியோவை எடுத்து தரச் சொன்னேன். ஆனால் அந்த வேடத்தில் அவரைப் பார்த்தவர்கள் திருநங்கை என்று நினைத்துக் கொண்டு தாக்கி விட்டார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் செய்ததுதான் சமூகக் குற்றம். இந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது சம்பந்தமே இல்லாமல் பிரச்சனையாக மாற்றி உள்ளார்கள். இது தொடர்பாக புகார் அளிக்க தான் நாங்கள் காவல் நிலையம் வந்திருக்கிறோம் என்று விக்ரமனின் மனைவி ஆவேசமாக பேசி இருக்கிறார்.






