பிக் பாஸ் வீட்டில் ஓயாமல் ஒலிக்கும் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரின் மாத சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

0
802
- Advertisement -

பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரின் சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கமலுக்கு பிறகு ஐந்து வருடங்களாக பிக் பாஸில் மாறாமல் இருப்பது பிக் பாஸின் குரல் தான்.

-விளம்பரம்-

விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒளிபரப்பானாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரபாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ப்ரோமோ வீடியோவில் கேட்கும் குரல் மக்களுக்கு மிகவும் பரிட்சியமான ஒரு குரலாக இருந்து வருகிறது. “பிக் பாஸ் தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்” என்ற Promo-வில் கம்பீரமான குரலுக்கு பின்னால் இருக்கும் அவரது முகத்தை இதுவரை பெரும்பாலானோர் கண்டதில்லை.

- Advertisement -

பிக் பாஸ் ப்ரோமோ குரலுக்கு சொந்தக்காரர் :

அந்த பிரம்மாண்ட குரலுக்கு சொந்தக்காரரின் பெயர் கோபி நாயர் என்பது மட்டுமே நமக்கு தெரியும். கோயம்பத்தூரை சேர்ந்த இவர் 2000 ஆம் ஆண்டு வேலை தேடி சென்னை வந்துள்ளார். முதலில் இயக்குனராக வர வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்த இவருக்கு, இவரது குரல் வளத்தை கண்டு டப்பிங் ஆர்டிஸ்டாக வாய்ப்பு கிடைத்துள்ளது.தொடர்ந்து டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வந்த இவருக்கு விஜய் டிவியில் டப்பிங் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது.

கோகுல் முதல் ரிஷி வரை அடிபட்ட பெயர்கள் :

ஆனால், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுடன் பேசும் அந்த பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.அது யார் என்பதை அறிந்து கொள்ள பலரும் ஆவலுடன் இருந்து வருகின்றனர். மேலும், அது மாநாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்ற கோகுலின் குரல் என்று கூறப்பட்டது. ஆனால், அவரும் இதை மறுத்து இருந்தார். அதே போல தொகுப்பாளரும் நடிகருமான ரிஷி தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் என்று கூறப்பட்டது. ஆனால், அதைப்பற்றிய உறுதியான தகவல் வெளியாகவில்லை.

-விளம்பரம்-

லாஸ்லியாவிற்கு தன் புகைப்படத்தை அனுப்பிய பிக் பாஸ் :

அவ்வளவு ஏன் கடந்த மூன்றாவது சீசனில் லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் ஒரு புகைப்படம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.அந்த புகைப்படத்தில் இருப்பது தான் பிக் பாஸ் என்றும் கூறப்பட்டது. ஆனால், அந்த புகைப்படத்தில் கூட பிக் பாஸ்ஸின் முகம் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் அந்த புகைப்படத்தில் பிக் பாஸ் ஒரு இளமையான நபராக தான் தெரிந்தார். இப்படி ஒரு நிலையில் தன பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் சச்சுதாநந்தம் என்பவர் தெரியவந்தது.

This image has an empty alt attribute; its file name is image-41.png

சச்சுதாநந்தம் ஒரு மாத சம்பளம் :

இவருடைய பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும் இவர் பாலிவுட் வரை வேலை செய்து இருக்கிறாராம். இவர் கடந்த ஆண்டு தன்னுடைய குரலில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்ட போதே ரசிகர்கள் இவர் தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் என்பதை உறுதி செய்துவிட்டனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இவரது குரலுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நூறு நாட்களுக்கு சேர்த்து சாஷோவுக்கு வழக்கப்பட்ட சம்பளம் பதினேழரை லட்சம் என கூறப்படுகிறது. அந்த வகையில் அவருக்கு மாதம் 5 லட்சம் சம்பளம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

Advertisement