இன்னொரு முறை Smooking Room போனா Evict பண்ணிடுவேன் – போட்டியாளரை எச்சிரித்த பிக் பாஸ்.

0
406
smooking
- Advertisement -

பிக் பாஸ் போட்டியாளரான “ஏடிகே”வை ஒரு காரணத்தை கூறி இப்படி இனி செய்தால் பிக் பாஸ் வீட்டை வெளியில் அனுப்பி விடுவேன் என்று பிக் பாஸ் எச்சரித்துள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் தொடங்கி தற்போது 88 நாட்கள் ஆகிய நிலையில் ஏற்கனனே தனலட்சிமி மணிகண்டன் உட்பட 13 பேர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் 8 பேர் மட்டுமே தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியம் குறையாமல் இருக்க பிக் பாஸ் குழு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாகி வருகின்றனர். அதோடு எந்த டாஸ்க்கிலும் சாப்பாடு முதல் மற்ற வேலைகள் வரை பிக் பாஸ் வீட்டில்தான் செய்யப்படுகிறது என்று சொன்னாலும் இடையில் ஞயற்று கிழமைகளில் மட்டும் பிக் பாஸ் லைவ் நிறுத்தப்படுகிறது. இது தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது, அதே போல சில இடங்களில் கேமராக்கள் இருப்பதில்லை அந்த இடத்தை குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அது ஸ்மோக்கிங் அரை.

- Advertisement -

ஸ்மோக்கிங் ரூம் :

கடந்த சீசனில் இருந்து தான் இந்த அறை குறித்து அதிகமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு இருந்தது. இந்த முறையும் ஸ்மோ ஸ்மோக்கிங் அறை வைக்கப்படுகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்திற்கு பக்கத்திலேயே இந்த அறை வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அங்கு கேமரா கிடையாது. கடந்த சீசனில் இருந்து தான் இந்த அறை குறித்து அதிகமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு இருந்தது. தற்போது அசீம் முதல் மணிகண்டன் வரை பலரும் இந்த ஸ்மோக்கிங் ரூமை பயன்படுத்தி வருகின்றனர்.

மயங்கி விழுந்த ஏடிகே :

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் அதிகமாக ஸ்மோக்கிங் ரூமை பயன்படுத்தும் போட்டியாளர்களில் ஒருவர் ஏடிகே. இவர் கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது மயங்கி விழுந்ததினால் அவரை பிக் பாஸ் வீட்டில் உள்ள மருத்துவர்கள் இருக்கும் அறைக்கு அழைத்து சென்று சிகிச்சை எடுத்த பின் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். மேலும் மருத்துவர்கள் இப்படி இனி ஆகாமல் இருக்க புகைப்பிடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கண்டிப்பாக கூறியிருந்தனர்.

-விளம்பரம்-

வெளியில் அனுப்புவதை தவிர வேறு வழியில்லை :

ஆனால் ஏடிகே அளவுக்கு மீறி புகைப்பிடித்தால் பிக் பாஸ் ஏடிகேவை அறிவுறுத்தும் அரைக்கும் அழைத்திருந்தார். அப்போது உள்ளே செல்லும் போது “ஏடிகே” தன்னை பிக் பாஸ் தீட்ட போகிறார் என்று தெரிந்துதான் உள்ளே சென்றார். பின்னர் பிக் பாஸ் கூறியது `உங்களை மருத்துவர்கள் கண்டிப்பாக புகை பிடிக்க கூடாது எனக் கூறியிருந்தனர். உங்களுடைய மன அழுத்தம் எனக்கு புரிகிறது, இருந்தாலும் இப்போதே நீங்கள் சோர்வாக இருக்கிறீர்கள், இப்படியே இருந்தால் உங்களை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் அனுப்புவதை விட வேறு வழியில்லை என்று கூறியிருந்தார்.

அறிவுரை கூறிய பிக் பாஸ் :

இதற்கு ஏடிகேவும் `சரி பிக் பாஸ் நா இனி ஸ்மோக் பண்ணல என்னோட உடலை பார்த்துக் கொள்கிறேன் எனக் கூற, பிக் பாஸ் மீண்டும் ஏடிகே விடம் உங்களுடைய உடல் நிலை சரியில்லை, இப்போதே நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பதை போல தெரிகிறது. இப்படியே போனால் நாங்கள் உங்களை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என்றும், இனிமேல் அந்த இடத்திற்கு மீண்டும் செல்லாதிர்கள், உடலை பார்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி ஏடிகேவை வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் பிக் பாஸ். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement