விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மெட்டிஒலி நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,,Adk என்று 7 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.
Mani is warned by Bigg Boss for revealing outside information. he was talking about outside support and video cuts used by other fandoms to boost their favorites.#BiggBossTamil6 pic.twitter.com/XPeA2gx2fc
— Bigg Boss Follower (@BBFollower7) January 12, 2023
எஸ்கேப்பான அமுதவாணன் :
கடந்தவாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் கடந்த வார நிகழ்ச்சியில் இறுதியில் ரட்சிதா வெளியேறி இருந்தார். அதே போல இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் வென்ற அமுதவானனை தவிர மற்ற 6 பேரும் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய பல போட்டியாளர்கள் உள்ளே சென்ற வண்ணம் இருகின்றனர்.
வெளியேறிய போட்டியாளர்கள் வருகை :
அந்த வகையில் மணிகண்டன், தனலட்சிமி, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், ஜி பி முத்து, அசல் கோளாறு என சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பலரும் சக போட்டியாளர்களுடன் ஜாலியாக சில டாக்குகளை விளையாடி வருகின்றனர். மேலும் தற்போது கதிரவன் ஒருநாள் பிக் பாஸாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் காலையில் கடந்த வாரம் வெளியேறிய மணிகண்டன் வந்திருந்தார்.அதற்கு முன்னரே தனலட்சிமியும், அசல் கோளாறும் வந்திருந்தனர்.
Bigg Boss gives a final warning, especially to Mani and Dhana.#BiggBossTamil6 pic.twitter.com/3gd1ZwwxKy
— Bigg Boss Follower (@BBFollower7) January 12, 2023
உண்மையை உளறி போட்டியாளர் :
இந்த நிலையில் மணிகண்டன் அசீமை அழைத்து பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் இருக்கும் ரசிகர்கள் அவருக்காக வீடியோ கட் செய்து அவரை எவ்வாறு ஊக்கப்படுத்துகிறார்கள் என்றும், அசீமை முன்பு இருந்தது போலவே இருந்தால் போதும் என அசீமின் செல்வாக்கு குறித்து அவர் பேசும்போது, மணிகண்டனை வெளிப்புற தகவல்களை கசிய வைக்க வேண்டாம் பிக் பாஸ் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். இதற்கு முன்னராக வந்த தனலட்சிமி பிக் பாஸ் கூறியும் தொடர்ந்து வெளியில் நடக்கும் விஷியங்களை கூறிக்கொண்டே இருந்தார்.
Ithu mani mattum sollala vanthavanga ellaruma sonnaga
— Janani (@RangarR10) January 12, 2023
கடுமையாக எச்சரித்த பிக் பாஸ் :
இப்படைப்ட்ட நிலையில்தான் இன்று உள்ளே வந்த மணிகண்டன் தனலட்சிமியை வாயை மூடி இருக்கும் படி கூறினார். ஆனாலும் தனலட்சிமி தொடர்ந்து சிலவற்றை கூறிக்கொண்டே இருந்தார். இதனால் பொறுமை இழந்த பிக் பாஸ் உள்ளே வந்த போட்டியாளர்களுடம் நீங்கள் எந்த காரணம் கொண்டும், யார் கேட்டாலும் வெளியில் நடக்கும் விஷியத்தை போட்டியாளர்களுக்கு கூறக்கூடாது எனவும் அப்படி கூறினால் இனி சொல்லமாட்டேன் முன்பக்க கதவை திறந்து விடுவேன் என்று இறுதியாக கடுமையாக எச்சரித்தார் பிக் பாஸ்.