இது போன்ற போட்டியாளர்களை ஏன் எடுக்கிறீர்கள் – விமர்சனத்துக்கு உள்ளன ஆயிஷா மற்றும் ஷெரினா.

0
381
ayesha
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் மலையாளத்தில் பேசிய ஆயிஷா மற்றும் ஷெரினாவை பிக் பாஸ் எச்சரித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக சாந்தி வெளியேற்றப்பட்டார். அதே போல ஜிபி முத்து தாமாக முன் வந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல வித்திருமுறைகள் இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் வன்முரையில் ஈடுபடக்கூடாது, ஆபாசமாக பேசக்கூடாது, மைக்கை பாத்ரூம் செல்லும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கழட்ட கூடாது.

இப்படி பல விதி முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கிய விதியாக இருந்து வருவது போட்டியாளர்கள் யாரும் தமிழைத் தவிர வேறு எந்த மொழிகளிலும் உரையாடக்கூடாது. அதற்கு முக்கிய காரணம் எந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களுக்காக ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சியாகும் இதனால் போட்டியாளர்கள் பேசிக்கொள்ளும்போது பெரும்பாலும் தமிழில் தான் பேச வேண்டும் என்பதுதான் முக்கிய விதியாக இருந்து வருகிறது.

-விளம்பரம்-

ஆனால், இந்த நிகழ்ச்சியில் தமிழ் பேசும் போட்டியாளர்களை தவிர பிற மொழி பேசும் போட்டியாளர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்களையும் மீறி ஆங்கிலத்திலையோ அல்லது அவர்களின் தாய் மொழிகளிலேயோ பேசுவது வழக்கமான ஒரு விஷயம் தான். அப்படி தொடர்ந்து பேசும்போது அவர்களை பிக் பாஸ் நிச்சயம் எச்சரிப்பார். அதேபோல பிற மொழி பேசும் போது தமிழ் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ஆயிஷா மற்றும் ஷெரினா இருவரும் மலையாளத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையாடலில் மற்ற போட்டியாளர்கள் குறித்து அவர்கள் இருவரும் விவாதித்துக் கொண்டு இருந்தார்கள். இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே தமிழில் பேச வேண்டும் என்று பிக் பாஸ் எச்சரித்து இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர தமிழர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இதுபோன்று பிற மொழிகள் பேசும் போட்டியாளர்களை ஏன் அனுமதிக்க வேண்டும். இதுபோன்று நடக்கும் போட்டியாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று நெட்டில் செங்கல் கூறி வருகிறார்கள்.

Advertisement