நிவாஷினியிடம் மைனா கேட்ட கேள்வி – Thug Lifeல் எச்சரித்த பிக் பாஸ். அப்படி என்ன கேட்டார் ?

0
565
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மெட்டிஒலி நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,,Adk என்று 7 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

கடந்தவாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் கடந்த வார நிகழ்ச்சியில் இறுதியில் ரட்சிதா வெளியேறி இருந்தார். அதே போல இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் வென்ற அமுதவானனை தவிர மற்ற 6 பேரும் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய பல போட்டியாளர்கள் உள்ளே சென்ற வண்ணம் இருகின்றனர்.

- Advertisement -

வெளியேறிய போட்டியாளர்கள் வருகை :

அந்த வகையில் மணிகண்டன், தனலட்சிமி, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், ஜி பி முத்து, அசல் கோளாறு, நிவாஷினி, குயின்சி என சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பலரும் சக போட்டியாளர்களுடன் ஜாலியாக சில டாக்குகளை விளையாடி வருகின்றனர். மேலும் தற்போது கதிரவன் ஒருநாள் பிக் பாஸாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் காலையில் கடந்த வாரம் வெளியேறிய மணிகண்டன் வந்திருந்தார்.அதற்கு முன்னரே தனலட்சிமியும், அசல் கோளாறும் வந்திருந்தனர்.

வெளியில் நடக்கும் விஷயங்களை கேட்கும் போட்டியாளர்கள் :

பிக் பாஸ் வீட்டிற்கும் மீண்டும் உள்ளே வரும் போட்டியாளர்களிடன் வெளியில் என்ன நடக்கிறது, தங்களை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஆவலாக இருந்து வருகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் கூட ணிகண்டன் அசீமை அழைத்து பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் இருக்கும் ரசிகர்கள் அவருக்காக வீடியோ கட் செய்து அவரை எவ்வாறு ஊக்கப்படுத்துகிறார்கள் என்றும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

எச்சரித்த பிக் பாஸ் :

மேலும், அசீமை முன்பு இருந்தது போலவே இருந்தால் போதும் என அசீமின் செல்வாக்கு குறித்து அவர் பேசும்போது, மணிகண்டனை வெளிப்புற தகவல்களை கசிய வைக்க வேண்டாம் பிக் பாஸ் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். அப்படி இருந்தும் அடிக்கடி போட்டியாளர்கள் வெளியில் நடக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ள ஆவலாக கேட்டு கொண்டு இருந்தனர்.இப்படி ஒரு நிலையில் நிவாஷினியிடம் மைனா பிக் பாஸின் Trp குறித்து கேட்டு இருந்தார்.

Trp குறித்து கேட்ட மைனா :

ஷோக்கு வெளியில் ரெஸ்பான்ஸ் எல்லாம் எப்படி இருக்கிறது. கண்டிப்பாக பிக் பாஸ் முடியும்போது டிஆர்பி கொஞ்சம் இறங்கும். ஆனால், இந்த சீசன் எப்படி என்று தெரியவில்லை. அதனால் தான் கேட்டேன்’ என்று நிவாஷினியிடம் கேட்டார் மைனா. உடனே பிக் பாஸ் ”ஹ்ம்ம் அப்புறம்’ என்று சொன்னதும் மைனா கையை தூக்க, ‘இப்படி கையை தூக்குவது எல்லாம் நடக்க வேண்டும் என்றால் இது மாதிரி கேட்பதை நிறுத்துங்கள்’ என்று மைனாவை Thug Lifeல் எச்சரித்தார் பிக் பாஸ்

Advertisement