இந்த வாரமும் ஓப்பன் நாமினேஷன் – கொத்தாக மாட்டிய இத்தனை மிச்சர் கன்டஸ்டண்ட். யார் வெளியே போவார் சொல்லுங்க.

0
212
biggboss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்காக நாமினேஷன் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 47 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்த வார தலைவர் :

மேலும், இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை போட்டியை கடினமாக்கி வருகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில் வாரத்தின் முதல் நாள் என்பதால் தலைவர் பதவிக்கான டாஸ்க்கும் இந்த வாரத்திற்காக நாமினேஷனும் நடைப்பெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் தலைவர் பதவிக்கான போட்டியில் அசீம் வேற்று பெற்று இருந்தார்.

மீண்டும் ஓப்பன் நாமினேஷன் :

இதை தொடர்ந்து இந்த வாரத்திற்காக நாமினேஷன் நடைபெற்று இருந்தது. கடந்த வாரத்தை போல இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. கடந்த வாரம் இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் என்ற போதிலும் பெரும்பாலான போட்டியாளர்கள் உப்பு சப்பு இல்லாத காரணத்தை எல்லாம் சொல்லி நாமினேஷன் செய்திருந்தார்கள் நேற்றைய நிகழ்ச்சிகள் கூட உலகநாயகன் கமல் இதனை சுட்டிக்காட்டி ஒருவேளை கன்பசன் ரூமில் நாமினேஷன் நடைபெற்று இருந்தால் யாரையும் நாமினேஷன் செய்வீர்கள் என்று கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

நாமினேஷனில் இடம்பெற்ற நபர்கள் :

இதற்கு பல போட்டியாளர்களும் தாங்கள் நாமினேட் செய்திருந்தவர்களை தாண்டி வேறு சில நபர்களின் பெயர்களை சொல்லி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இன்று நடைபெற்ற இந்த வாரத்திற்கான நாமினேஷனும் ஓபன் நாமினேஷன் ஆகவே இருந்தது. ஆனால், இம்முறை பெரும்பாலான போட்டியாளர்கள் நேர்மையான காரணங்களை கூறி நாமினேட் செய்திருந்தார்கள். அந்த வகையில் நாமினேஷன் இறுதியில் இந்த வாரம் ரட்சிதா, மைனா நந்தினி, ஜனனி,vj கதிரவன், குயின்சி, தனலட்சுமி ஆகியோர் இந்த வாரம் நாமினேஷனில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

வெளியே போக அதிக வாய்ப்பிருக்கும் போட்டியாளர்கள் :

இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ள நபர்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் வெறுப்பையும் மிச்சர் கன்டஸ்டண்ட் என்ற பெயரையும் எடுத்தவர்கள் தான். இருப்பினும் இந்த லிஸ்டில் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பது குயின்சி, Vj கதிரவன், மைனா நந்தினி ஆகிய மூவர்தான். இதில் கடந்த சில வாரமாகவே குயின்ஸி தான் ரசிகர்களால் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டில் சாப்பிடுவது தூங்குவது தவிர வேறு எதையும் செய்வதில்லை என்று இவருக்கு கோட்டா குயின்ஸி என்று பெயரையே வைத்து விட்டார்கள். எனவே, இந்த வாரம் இவர் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மக்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement