ஓட்டிங்கில் யார் முன்னணி.! இந்த வாரம் செம போட்டி இருக்கு போங்க.!

0
7355
bigg boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வார தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றனர்.

நேற்றய நிகழ்ச்சியில் ஓபன் நாமினேஷன் என்பதால் பலரும் கொஞ்சம் சங்கடமாகவே உணர்ந்தனர். அதிலும் சாக்க்ஷி கவினை நாமினேட் செய்ததால் லாஸ்லியா சாக்க்ஷியை நாமினேட் செய்தது தான் மேலும் ஒரு வியப்க பாக இருந்தது.

- Advertisement -

இறுதியாக கவினை- 6 பேரும், மதுமிதாவை 5 பேரும், ரேஷிமாவை 4 பேரும் சாக்க்ஷியை 3 பேரும், அபிராமியை 2 பெரும் நாமினேட் செய்துள்ளனர். எனவே, இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சாக்க்ஷி, கவின், அபிராமி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்னர்.

Reshma

மேலும், நேற்று முதலே ஓட்டிங் பிரசாஸ் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதில் சாக்க்ஷி மற்றும் ரேஷ்மாவிற்கு தான் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது. இதனால் இந்த வாரம் வெளியேற போவது சாக்க்ஷியா அல்லது ரேஷ்மாவா என்று பெரும் போட்டியே நிலவி வருகிறது.

-விளம்பரம்-

சொல்லபோனால் கடந்த வாரம் மீரா மிதுன் வெளியேறிய போது சாக்க்ஷி தான் குறைவான வாக்குகள் வந்தன. ஆனால், கடைசி நாளில் மீரா மிதுன் செய்த சேட்டைகளால் மீரா மிதுனுக்கு குறைவான வாக்குகள் விழுந்தன. இதனால் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement