விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 66 நாட்களை கடந்து விட்டது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது. ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். அதே போல இரண்டாம் வைல்டு கார்டு போட்டியாளரான சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார்.எனவே, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை இந்த வாரம் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள்.
இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் 4 சீஸனின் மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சீரியல்களில் சிவாணிக்கு ஜோடியாக நடித்த அஸீம் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைய இருக்கிறார் என்று பல வாரமாக செய்திகள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. இதனால் அவர் ஹோட்டலில் தனிமைபடுத்தப்பட்டு இருந்தார். ஆனால், சமீபத்தில் அவரது அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போக ஹோட்டலில் இருந்து வெளியேறினார்.
இருப்பினும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று பெரிதும் நம்பப்பட்ட நிலையில், தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகவதில்லை என்று கூறியுள்ளார் அசீம். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ஒருசிலர் அழுத்தம் மற்றும் பிரச்சனை காரணமாக நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை இவ்வளவுதான் என்னால் தற்போதைக்கு சொல்ல முடியும் உங்களை ஏமாற்றி இதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் உங்களின் அன்பும் ஆதரவுக்கும் நன்றி விரைவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரபல பத்திரிகையில் வெளியான செய்தியில், அஸீம் உள்ளே சென்றால் ஷிவானிக்குப் பிரச்னை வரலாம். அதனால் ஷிவானி எவிக்ஷனில் வெளியேற்றப்படும் சூழல்கூட உருவாகலாம். இப்படிப்பட்ட சூழல் உருவாகிவிடக்கூடாது என்பதற்காக ஷிவானி தரப்பில் சிலர் வேலை செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அஸீம் மற்றும் ஷிவானி ஒன்றாக சீரியலில் நடித்த போதே இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும் இதனால் அஸீம் மற்றும் அவரது மனைவிக்கு பிரச்சனை ஏற்பட்டதகவும் கடந்த சில மாதத்திற்கு முன்னர் கிசு கிசு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.