இந்த வருட பிக் பாஸ் வீட்டின் முதல் “Wild Card Entry” இவர் தானா..? அப்படினா சண்ட இருக்கு..!

0
438
Bigg-Boss

பிக் பாஸ் நிகழ்ச்சி பாதி எபிசோடுகளை கடந்து விட்டது. இன்னும் 11 போட்டியாளர்களே மீதமுள்ள நிலையில் இந்த வாரம் பொன்னம்பலம் வெளியேற போகிறார் என்ற தகவல் ஏற்கனவே நமது வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரியில் செல்லப்போவது யாராக என்ற தகவல் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.

kasthoori

சமீபத்தில் பிக் பாஸ் செட்டிற்குள் பிரபல நடிகை கஸ்தூரி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இந்த வாரம் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரியில் அவரை பிக் பாஸ் வீட்டினுள் எதிர்பார்க்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.ஆனால், அவர் வைல்ட் கார்டு என்ட்ரிக்காகதான் பிக் பாஸ் செட்டிற்குள் சென்றுள்ளாரா, இல்லை சிறப்பு விருந்தினராக சென்றுள்ளாரா என்று இன்னும் ஊர்ஜிதமாகவில்லை.

அதே போல இந்த நிகழ்ச்சி தொடங்கபட்டதற்கு முன்பாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களில் பட்டியல் என்று பல்வேறு வலைத்தளத்தில் பல பெயர் பட்டியல் பரவி வந்தது.அதில் கஸ்தூரி பெயரும் அடிக்கடி அடிபட்டது. ஆனால், இந்த நிகழ்ச்சி துவங்கபட்டதற்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தனக்கு சின்ன பிக் பாஸ்தான் (கஸ்தூரியின் மகன்) முக்கியம், எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் எண்ணமில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Kasthuri

அதனால் நடிகை கஸ்தூரி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரி மூலம் போட்டியாளராக செல்வாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.அதே போல கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள போட்டியாளர்களால் நிகழ்ச்சி சுவாரசியமாக இல்லை என்ற ஒரு கூற்றும் நிலவி வருகிறது. ஒரு வேலை நடிகை கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றால் ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது மட்டும் உறுதி.