அபிராமி, நிரூப் தொடர்பான சர்ச்சை குறித்து மனம்திறந்த முன்னாள் காதலி யாஷிகா. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
390
niroop
- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோக்கள் போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தொடங்கி இருக்கிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். இதில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், ஜூலி, தாமரை சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர். இதில் நிரூப்,அபிராமியும் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அபிராமி- நிரூப் இருவரும் சில வருடங்களுக்கு முன்னாள் காதலித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல் நடிகை யாஷிகா ஆனந்த்துடன் நிரூப் காதலில் இருந்து பிரேக் அப் ஆனது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலேயே தெரியும். அதோடு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததே யாஷிகா ஆனந்த் மூலம் தான் என்று நிரூப்பே வெளிப்படையாக கூறி இருந்தார். தற்போது மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி, நிரூப் கலந்து இருக்கிறார்கள். முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப், அபிராமி சேர்ந்து புகை பிடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் செலிபிரிட்டி vs பிரஸ் மீட்:

மேலும், நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே அபிராமி- நிரூப் குறித்த மீம்ஸ்களும், இவர்களுடைய பிரேக்கப் குறித்த சர்ச்சைகளும் தான் அதிகமாக போகிறது. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் நிகழ்ச்சியில் செலிபிரிட்டி vs பிரஸ் மீட் என்ற டாஸ்க் நடந்தது. அதில் அபிராமி, நிரூப்பிடம் தங்களுடைய உறவு குறித்தும், பிரேக் அப் குறித்தும் வெளிப்படையாக கேட்டு இருந்தார். அதற்கு நிரூப்பும், நான் அபிராமி உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் .அப்போது இருந்த அபிராமி இப்போது இல்லை.

அபிராமி – நிரூப் காதல்:

அவர் நிறைய மாறி விட்டார். அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார். அதேபோல அபிராமியும், நாங்க ரெண்டு பேரும் டீசன்டாக பேசி தான் பிரிந்தோம். அதுமட்டுமில்லாமல் எங்களைப் பற்றி பல மீமிஸ், ட்ரோல்ஸ் எல்லாம் பயங்கரமாக வந்து இருக்கிறது. அதை தெளிவுபடுத்துவதற்காக தான் பேசினோம். அது மட்டும் இல்லாமல் இதைப்பற்றி ஓபன் ஆக பேசுவதற்கு எங்களுக்கு எந்த ஒரு அசிங்கமும், பிரச்சனையும் கிடையாது என்று சொல்லியிருக்கிறார். அதை தொடர்ந்து நிரூப், ஏன் என்னிடம் மட்டும் விலகி இருக்க முயற்சி பண்றீங்க? என்று அபிராமியிடம் கேட்டார்.

-விளம்பரம்-

விளக்கம் கொடுத்த அபிராமி, நிரூப்:

அதற்கு அபிராமி, எனக்குப் பிறகு நீங்கள் வேறு ஒருவர் உடன் ரிலேஷன்சிப்பில் இருந்தீர்கள்? போன சீசனில் அங்கு வந்திருந்த போது உங்களுடைய ரியாக்சன்ஸ் பார்த்தேன். என்னால உங்க ரெண்டு பேருக்கும் எந்தவிதமான குழப்பமும் வர வேண்டாம் என்ற நோக்கத்தில்தான் விலகி இருந்தேன் என்று கூறியிருந்தார். உடனே நிரூப், அது எல்லாம் ஒன்றும் கிடையாது. என்னிடம் இயல்பாக பழகலாம் என்று விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் யாஷிகாவிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

இவர்களின் காதலுக்கு யாஷிகா அளித்த பதில்:

அப்போது ரசிகர் ஒருவர் நிரூப்- அபிராமி தொடர்பாக கேள்வி கேட்டார். அதற்கு யாஷிகா கூறியிருப்பது, இப்பவும் எப்பவும் நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். இப்போதைக்கு யாரையும் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை. நிரூப் அவரது முன்னாள் காதலியை சந்திப்பதும், ஒரே வீட்டில் இருக்கப் போகிறதும் எனக்கு முன்னரே தெரியும். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இருவருக்கும் தனிப்பட்ட முடிவு எடுக்க உரிமை உண்டு. அது குறித்து கமெண்ட் செய்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. வாழு, வாழ விடு. அதோடு நாங்கள் சில மாதங்களுக்கு முன்னரே நாங்கள் பிரிந்து விட்டோம் என்று யாஷிகா பதிலளித்திருக்கிறார்.

Advertisement