சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவிற்கு ஆறுதல் சொன்ன பிரபல நடிகர் – ஆமா, இவரு ஏன் ஆறுதல் சொல்றாரு ?

0
1702
yashika
- Advertisement -

சமீபத்தில் விபத்தில் சிக்கி படு காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவிற்கு பிரபல நடிகர் ஆறுதல் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். இந்த விவகாரத்தில் யாஷிகா மீது அதி வேகமாக காரை ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தியது என்று மூன்று பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் விபத்துக்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை நீக்கியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், விபத்திற்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இப்படி ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து என்னை காப்பாற்ற இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை படிப்பது என்பது தெரியவில்லை.

இதையும் பாருங்க : அன்று நீயா நானாவில் பங்கேற்பாளர், இன்று ராஜா ராணியில் முக்கிய நடிகை – அதுவும் எந்த தலைப்பில் பேசி இருக்காங்க பாருங்க.

- Advertisement -

எனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும் பதிவிட்டு இருந்தார். அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள யாஷிகா சென்னையில் தனது தோழி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். யாஷிகாவின் விபத்து செய்தியை கேட்டு பல பிரபலங்களும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். அந்த வகையில் நடிகர் ஸ்ரீகாந்த், யாஷிகாவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ஆறுதல் கூறி இருக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is 2-37-574x1024.jpg

அதில், அன்புள்ள யாஷிகா நீங்கள் மிகவும் உறுதியாகவும் பாசிடிவாகவும் இருக்க வேண்டிய நேரம் இது. கண்டிப்பாக நீங்கள் பழைய நிலைக்கே திரும்பி வருவீர்கள். நானும் இதுபோன்ற நிகழ்வை எதிர்கொண்டு இருக்கிறேன். அது எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். விரைவில் நீங்கள் குணமடைந்து நல்ல உடல் நிலையை பெறுவீர்கள் என்று வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார். இதற்கு யாஷிகா நன்றி தெரிவித்து உள்ளார். யாஷிகாவுடன் இதுவரை ஸ்ரீகாந்த் எந்த படத்திலும் நடித்தது இல்லை. இருப்பினும் யாஷிகாவிற்கு ஆறுதல் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement