கோர விபத்திற்கு பின் முதன் முறையாக கடை திறப்பிற்காக வெளியில் வந்த யாஷிகா ஆனந்த்.

0
175
yashika
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அதே போல தன் உடல் நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : மீண்டும் தள்ளிப்போன மாநாடு படத்தின் ரிலீஸ் – வருத்தத்துடன் தயாரிப்பாளர் போட்ட ட்வீட் (டிக்கெட் புக் பண்ணவங்க கதி )

- Advertisement -

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வரும் யாஷிகா அடிக்கடி தண்னுடைய உடல் நிலை குறித்து தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் விபத்திற்கு முதன் முறையாக பின் எழுந்து நடந்த வீடியோ ஒன்றை பதிவிட்டு 95 நாட்களுக்கு முன் குழந்தை போல முதல் அடி எடுத்து வைக்கிறேன் என்று கூறி இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-213-579x1024.jpg

இப்படி ஒரு நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார் யாஷிகா. உடல் நிலை குணமான நிலையில் யாஷிகா இன்று சென்னையில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்று இருக்கிறார். மேலும், 4 மாதங்கள் கழித்து வெளியில் வந்துள்ளதாக யாஷிகா ஆனந்த் சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement