பள்ளி பருவத்தில் கராத்தே கலையில் யாஷிகா செய்த வீர சாகசம்.! செம ஆளுதான்.!

0
771
- Advertisement -

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரிச்சயமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பெரும் பிரபலமடைந்தார். தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீ டூ குறித்து பேசிய யாஷிகா பெண்கள், தற்காப்பு கலையை கற்க வேண்டும். பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். அதைத்தாண்டி, பெண்கள், தங்களின் வலிமையை காட்ட வேண்டும் என்று பேசியிருந்தார்.

- Advertisement -

அதே போல யாஷிகா ஆனந்த் பள்ளியில் படிக்கும் போதே தற்காப்பு கலைகளை கற்றுவந்துள்ளார். இதனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது கூட யாஷிகா ஆனந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் ஓட்டை தலையால் உடைக்கும் பயிற்சயில் ஈடுபட்டுள்ளார் யாஷிகா ஆனந்த். மேலும், கராத்தே பயிற்சயில் தான், பிளாக் பெல்ட்டை வாங்கும் போது மேற்கொண்ட பயிற்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement