இறுதியாக என் தாய் தந்தையரின் கனவை நிறைவேற்றி விட்டேன் – யாஷிகாவின் மகிழ்ச்சியான பதிவு.

0
645
yashika
- Advertisement -

என் தாய் தந்தையின் கனவை நிறைவேற்றி விட்டேன் என்று யாஷிகா ஆனந்த் கூறியிருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா என்ற அறிமுகமாகி இருந்தார். பின் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார்.

-விளம்பரம்-

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடித்து இருந்தார் யாஷிகா. அதற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருந்தார் யாஷிகா. மேலும், யாஷிகா ஆனந்த் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

- Advertisement -

யாஷிகா ஆனந்த் ஏற்பட்ட விபத்து:

சோசியல் மீடியாவில் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தும் தான் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டும் இருந்தார். கடந்த ஆண்டு சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தார். ஆனால், இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி அநியாயமாக பலியானார்.

சிகிச்சைக்கு பிறகு யாஷிகா ஆனந்த்:

இதனால் யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. பின் யாஷிகா தன் உடல் நலம் குறித்து அடிக்கடி சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். மேலும், யாஷிகா ஆனந்த் வீடு திரும்பி இருந்தார். உடல் குணம் அடைந்து யாஷிகா ஆனந்த் முதன் முதலாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார்.

-விளம்பரம்-

யாஷிகா போட்ட பதிவு:

அதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நடத்த ஒரு நிகழ்ச்சிக்கு கூட யாஷிகா ஆனந்த் சென்று இருந்தார். இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் அவர்கள் சொந்தமாக வீடு வாங்கி இருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது, என் தாய், தந்தையின் கனவை வீடு வாங்கி நிறைவேற்றுவேன் என நான் நினைத்ததே இல்லை. நீங்கள் மிகவும் ஆசைப்பட்டு விரும்பிய ஒரு கனவு நிச்சயமாக உங்களது. கடின உழைப்பின் மூலமாக உங்கள் பெற்றோரின் ஆதரவு மூலமாகவும் கண்டிப்பாக நிறைவேறும்.

சொந்த வீடு வாங்கிய யாஷிகா:

எனக்கு 19 வயதாக இருக்கும்போது இந்த வீட்டை பார்த்து பதிவு செய்தோம். ஆனால், கொரோனா பிரச்சனை மற்றும் என் வாழ்வில் இடையில் நடந்த மிக மோசமான விபத்து, நண்பர்கள் இழந்தது போன்ற பல பிரச்சனைகள் காரணமாக இந்த வீட்டுக்குள் நுழைவதற்கு சரியான நேரம் அமையாமல் இருந்தது. இறுதியாக அது தற்போது நடந்துவிட்டது. கடவுளுக்கு நன்றி. 19 வயதில் நான் ஒரு வீட்டை எனதாக்குவேன் என நினைக்கவே இல்லை என்று பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement