இப்போ இத என்னால பண்ண முடியாது – உயிர் பிழைத்தோம்னி சந்தோச படாமல் யாஷிகாவின் கவலையை பாருங்க.

0
2033
yashika
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். இந்த விவகாரத்தில் யாஷிகா மீது அதி வேகமாக காரை ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தியது என்று மூன்று பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் விபத்துக்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை நீக்கியுள்ளார். மேலும், விபத்திற்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார்..

-விளம்பரம்-

இப்படி ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து என்னை காப்பாற்ற இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை படிப்பது என்பது தெரியவில்லை ஒவ்வொரு நொடியும் நான் பவானியை மிஸ் செய்வேன் நீ என்னை மன்னிக்க மாட்டார் என்பது தெரியும் என்னை மன்னித்துவிடு உன்னுடைய குடும்பத்தை இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி விட்டேன்.

இதையும் பாருங்க : இறுதி கட்டத்தை நெருங்கிய YNM – சன் டிவியின் புதிய தொடரில் கமிட்டான சைத்ரா. ஹீரோ இந்த விஜய் டிவி சீரியல் நடிகர் தான்.

- Advertisement -

தனது உடல் நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது. ஆனால் நல்லவேளை முகத்திற்கு எதுவும் ஆகவில்லை. நிச்சயமாக இது எனது மறுபிறப்பு தான். கடவுள் என்னை தண்டித்து விட்டார். ஆனால் நான் இழந்ததை ஒப்பிடுகையில், இது ஒன்றுமே இல்லை” என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உடற் பயிற்சி செய்த வீடியோவை பதிவிட்டு தற்போது இருக்கும் நிலையில் இது எனக்கு சாத்தியமே இல்லை என்று பதிவிட்டுள்ளார். இப்படி ஒரு கோரமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாக இருக்கும் நிலையில் உடற் பயிற்சி செய்ய முடியவில்லை என்று யாஷிகா புலம்பி இருப்பதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

-விளம்பரம்-
Advertisement