இறுதி கட்டத்தை நெருங்கிய YNM – சன் டிவியின் புதிய தொடரில் கமிட்டான சைத்ரா. ஹீரோ இந்த விஜய் டிவி சீரியல் நடிகர் தான்.

0
2410
yaaradi-nee-mohini
- Advertisement -

சினிமாவிற்கு இணையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டுவர தொலை காட்சிகள் அனைத்தும் மூலமாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது அந்த வகையில் தற்போது தொலைக்காட்சி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து வருவது ஜீ தமிழ் தொலைக்காட்சி தான்.

-விளம்பரம்-

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இன்றைய தேதியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது, ‘யாரடி நீ மோகினி’ தொடர் தான்.சன் தொலைக்காட்சியில் ஒளிப்பிரான நந்தினி சீரியலுக்கு பிறகு தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பட்ஜெட்டை கொண்டு உருவான சீரியல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : இது ஓவரா இல்ல – நவரசா நடிகருக்கு ஆஸ்கர் கொடுக்க சொன்ன லட்சுமி ராம்கி. ரசிகர்களின் கமெண்ட்ஸ்.

- Advertisement -

இந்த தொடர் விரைவில் முடிவடைய இருக்கிறது. இந்த தொடரில் ஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இதில் வில்லியாக நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி, தில் சைத்ரா ரெட்டியின் பெர்ஃபாமன்ஸ் காரணமாகவே இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் இடத்திலிருப்பதாக அவரது ரசிகர்கள் பெருமிதம் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்த தொடர் நிறைவடைய இருக்கும் நிலையில் தற்போது சைத்ரா, சன் தொலைக்காட்சியில் விரைவில் துவங்க இருக்கும் புதிய தொடரான ‘கயல்’ என்ற சீரியலில் நடிக்க இருக்கிறார். இந்த சீரியலில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் ஹீரோவாக நடிக்கிறார்.  அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியிருக்கின்றன.

-விளம்பரம்-
Advertisement