யாஷிகா செய்த செயல்..என்ன பிக்பாஸ் இப்படி வெளிப்படையா.?

0
515
Bigg-boss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர் என்பது தான் உண்மை. இதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் நடக்கும் சில நிகழ்வுகள் பிக் பாஸ்ஸே முன்கூட்டி முடிவெடுத்து நடத்துவது போல தான் இருக்கிறது. அதிலும் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவை இந்த நிகழ்ச்சியில் தக்க வைத்துக்கொள்ள பல வாரங்களாக பல தந்திரங்களை கையாண்டு வருகிறார் பிக் பாஸ்.

-விளம்பரம்-

Aishwarya-dutta

- Advertisement -

அதிலும் குறிப்பாக நாமினேஷன் என்று வந்துவிட்டால் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா மாறி மாறி காப்பாற்றுபட்டு வருகின்றனர். இந்த வார நாமினேஷனில் பாலாஜி, சென்றாயன், மஹத், மும்தாஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் பாலாஜி மற்றும் சென்றாயன் கடந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டனர்.

நேற்று நடைபெற்ற நாமினேஷனில் மக்கள் அவளுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவும் நாமினேஷன் லிஸ்டில் வந்ததும் மக்கள் மிகவும் சந்தோசப்பட்டனர்,ஆனால், வழக்கம் போல இந்த வார தலைவியாக இருக்கும் யாஷிகா, தனது தோழி ஐஸ்வர்யாவை காப்பற்றிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

-விளம்பரம்-

aishwarya

இது இந்த வாரம் மட்டுமல்ல கடந்த 5 வாரங்களுக்கு மேலாகவே நடந்து வருகிறது. ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவை வேண்டுமென்றே பிக் பாஸ் காப்பற்றி வருகிறார். இவர்கள் இருவரும் மாறி, மாறி தலைவியாக வருவதும், அப்படி இல்லையென்றால் ஸ்பெஷல் பவர் மூலம் காப்பற்றபடுவதுமாக இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் எப்போது நாமினேஷனில் வருவார்கள் என்று மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்

ஆனால், இவர்கள் இருவரும் நாமினேஷனில் பல முறை வந்தும் இவர்கள் இருவரையும் ஏதோ ஒரு வழியில் பிக் பாஸ் காப்பற்றி விடுகிறார். இனி வரும் காலங்களிலும் இவர்கள் இருவரும் காப்பற்றபட்டு வந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் மீதமுள்ள பார்வையாளர்களும் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்திவிடுவார்கள்.

Advertisement