நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலத்திற்கும், நடிகை ஐஸ்வர்யாவிற்கும் ஏற்பட்ட மோதல் தான் ஹைலைட்டாக இருந்து வந்தது. இவர்கள் இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் நடிகை மும்தாஜ் நடுவில் புகுந்து நாட்டாமை செய்து கொண்டிருந்தார்.
இருப்பினும் ஐஸ்வர்யா சமாதானம் ஆவது போல தெரியவில்லை. இதனிடையே ஐஸ்வர்யாவை, மும்தாஜ், டேனி, யாஷிகா ஆகியோர் தனியாக அழைத்து சமாதானம் செய்து கொண்டிருந்தனர். அப்போது நடிகை மும்தாஜ் ‘எந்த மாதிரி பேசுறாங்க , what the hell is this’ என்று கூறுகிறார். இதற்கு உடனே யாஷிகா ‘ நாம இந்த விஷயத்துல எதித்து பேசனா கூட யாரும் மதிக்க மாட்டாங்க, அதற்க்கு காரணம் தமிழ் ரசிகர்களும், தமிழ் கலாச்சாரம் போன்ற விடயங்கள் இதில் இருக்க வேண்டும் என்ற அழுத்தம் இருக்கிறது’ என்பது போல கூறுகிறார்.
இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே நடிகர் பொன்னம்பலம் தமிழ் கலாச்சாரத்தை பற்றியும், பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றியும் தான் வலியுறுத்தி வருகிறார். அவர் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளுமாறு நடிகர் கமலே பல முறை ஐஸ்வர்யாவிடம் கூறியுள்ளார். ஆனால், வேறு ஒரு கலாச்சாரத்தில் இருந்து வந்த ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோருக்கு இது ஒரு பிரச்சனையாக தான் தோன்றுகிறது.
ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா வேறு ஒரு கலச்சாரத்தில் இருந்து வந்திருக்கலாம் . எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று தான் சொல்லிக்கொடுத்து வளர்ப்பார்கள். அதை தான் பொன்னம்பலம் கூறினார். ஆனால், இதனை மறந்து ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா செய்த செயல் தமிழ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளதக்க விடயமாக இருக்குமா என்பது மக்களுக்கு தான் வெளிச்சம்.