ஓராண்டு நட்பை குடியும் கூத்துமாக கொண்டாடிய யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா.? புகைப்படம் இதோ.!

0
796
yashika ays

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு பிரபலதிற்கு பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வகையில் இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா. இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இணை பிரியாத தோழிகளாக இருந்து வருகின்றனர்.

View this post on Instagram

?

A post shared by aishwarya Dutta (@aishwarya4547) on

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஐஸ்வர்யா ‘தமிழிற்கு என் ஒன்றை அழுத்தவும் ‘ என்ற படத்தில் அறிமுகமானார். அதே போல யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர்கள் இருவருக்கும் பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஐஸ்வர்யா, தற்போது ஆரியுடன் ஒரு படம் மஹத்துடன் ஒரு படம் என்று நடித்து வருகிறார். அதே போல யாஷிகாவும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறிவிட்டனர்.

இந்த நிலையில் யாஷிகா மற்றும் ஐவார்யாவின் நட்பு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளதை யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். மேலும், இவர்கள் இருவரும் தங்களது ஓராண்டு நட்பை கேக் வெட்டி கொண்டாடியும் உள்ளனர்.

-விளம்பரம்-

அதே போல மற்றொரு புகைப்படத்தை இவர்கள் இருவரும் ஏதோ ஒரு பாரில் இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் உள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது இவர்கள் இருவரும் குடித்துவிட்டு தங்களது ஓராண்டு நட்பை கொண்டாடினார்களா என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

Advertisement