நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நீதி மன்றத்தில் நேரில் ஆஜரானார் யாஷிகா. தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர்.
இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.
கார் விபத்தில் இறந்த தோழி :
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது.
#Watch | மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில், கார் விபத்து ஏற்படுத்திய வழக்கில், விசாரணைக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர்! #SunNews | #YashikaaAnand | #CarAccidentCase pic.twitter.com/m2g6avOdLB
— Sun News (@sunnewstamil) April 25, 2023
வழக்கிற்கு ஆஜராகாத யாஷிகா ;
இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. விபத்தில் இருந்து மீண்டாலும் தன்னால் தான் தன் தோழி இறந்தார் என்று குற்ற உணர்வில் இருந்து வருகிறார் யாஷிகா. தற்போது உடல் நலம் தேறி வரும் யாஷிகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் யாஷிகா விளக்கம் :
இந்நிலையில் நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜரானார். அப்போது விசாரணை நடத்திய நீதிபதி, “ஏன் கடந்த 21-ம் தேதி ஆஜராகவில்லை” என கேட்டபோது, “உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆஜராக முடியவில்லை” என கூறினார். தொடர்ந்து அவரை வரும் ஏப். 25-ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா உத்தரவிட்டார்.
Antha the*****a mavale case pottu ulla thallunga
— Saala Nee Yaruda (@kamaleshjisettu) April 25, 2023
வச்சி செய்யும் நீதிமன்றம் :
இதனால் அவர்மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் தளர்த்தப்பட்டுள்ளது.இப்படி ஒரு நிலையில் வழக்கு விசாரணைக்காக இன்று ஆஜர் ஆனார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜீலை மாதம் 27ம்தேதி மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார். இப்படி அடிக்கடி ஆஜராக சொல்லி யாஷிகா ஆனந்தை வச்சி செய்கிறது நீதிமன்றம். ஆனால், பலரும் இவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.