யாஷிகாவிற்கு திருமணம் முடிந்ததா ? எல்லாத்துக்கும் காரணம் இந்த போட்டோ தான்.

0
2161
Yashika
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது இளசுகளின் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் . தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தில் அறிமுகமானவர். அதன் பின்னர் துருவங்கள் பதினாறு, பாடம் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படம் தான். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த யாஷிகா ஆனந்த், கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை யாஷிகா, ஊரடங்கில் ரசிகசியமாக திருமணம் முடிந்ததாக சமூக வலைதளத்தில் ஒரு கிசு கிசு வைரலாக பரவியது. அதற்கு முக்கிய காரணமே யாஷிகா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் தான். சமீபத்தில் புடவையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்திய யாஷிகா நெற்றியில் கும்குமத்துடன் தோற்றமளித்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஊரடங்கில் யாஷிகா திருமணத்தை முடித்து விட்டார் என்று கொளுத்தி போட்டு விட்டனர். இந்த நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள யாஷிகா, தலையில் குங்கும பொட்டுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் போட்டோ ஷூட்டுக்காக எடுக்கப்பட்டது என்றும், தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement