கோர விபத்தில் இறந்த 2 மாடல் அழகிகள் குறித்து யாஷிகா போட்ட உருக்கமான பதிவு – இவங்களும் தெரிஞ்சவங்களா ?

0
432
yashika
- Advertisement -

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 அழகிகள் சம்பவ இடத்திலேயே அநியாயமாக உயிரிழந்த செய்தியை யாஷிகா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கேரளாவின் பிரபல இளம் மாடல் அழகிகள் ஆன்சி கபீர் மற்றும் அஞ்சனா சாஜன். இவர்கள் இருவரும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் மிஸ் கேரளா என்ற பட்டத்தை வென்றவர்கள். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். மேலும், ஆன்சி கபீர் திருவனந்தபுரம் அருகிலுள்ள ஆற்றங்கல்லை சேர்ந்தவர். அஞ்சனா சாஜன் திருச்சூரை சேர்ந்தவர்.

-விளம்பரம்-

இந்நிலையில் இவர்கள் மட்டுமில்லாமல் இவர்களுடன் சேர்ந்து 4 பேர்கள் திருவனந்தபுரத்தில் நடந்த மாடலிங் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்தவுடன் அன்றிரவு காரிலேயே கொச்சி புறப்பட்டார்கள். பிறகு நேற்று அதிகாலை எர்ணாகுளம் புறவழி சாலையில் இவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே பைக் வந்தது. பின் பைக்கின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் காரை திருப்பினார். அப்போது கார் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதையும் பாருங்க : ஒன்னில்ல ரெண்டில்ல மொத்தம் 96,000 கேஸ் – யார் இந்த ‘ஜெய் பீம் ‘ சந்துரு. மனதை நெகிழ வைக்கும் அவரின் முழு பின்னணி.

- Advertisement -

காரில் இருந்த ஆன்சி கபீர் மற்றும் அஞ்சனா சாஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அநியாயமாக உயிரிழந்தனர். இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள யாஷிகா ‘மனம் உடைகிறது’ என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், விபத்தில் இறந்த இந்த இரண்டு மாடல்களும் யாஷிகாவிற்கு தெரிந்தவர்களா என்று குழம்பி போய்யுள்ளனர்.

This image has an empty alt attribute; its file name is 2-6.jpg

யாஷிகாவிற்கும் இவர்களை போலவேதான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கோரமான விபத்து நடந்தது. இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான வள்ளி ஷெட்டி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் விபத்திற்குப் பின்னர் முதல் முறையாக கால் தாங்களாக நடந்த வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement