கார் விபத்தால் பறிபோன பாலிவுட் வாய்ப்பு, யாஷிகாவே சொன்ன உண்மை. அதுவும் எதில் பாருங்க.

0
292
yashika
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-
South Indian Actress Yashika Anand सड़क हादसे में गंभीर रूप से घायल; दोस्त  की मौके पर ही मौत! - south indian actress yashika anand critically injured  in road accident friend dies on

அதே போல தன் உடல் நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது என்று கூறி இருந்தார்.

- Advertisement -

விபத்திற்கு பின் யாஷிகா :

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி உயிரிழந்தால் குற்ற உணர்ச்சிக்கு உள்ளானார் யாஷிகா. மேலும், விபத்திற்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும் வாழ்க்கை முழுதும் தன் தோழியை கொன்ற குற்ற உணர்வுடன் தான் இருப்பேன் என்றும் கூறி இருந்தார்.

yashika

கார் விபத்தால் பறிபோன வாய்ப்பு :

கிட்டதட்ட 4, 5 மாதங்கள் படுக்கையில் இருந்த யாஷிகா சமீபத்தில் தான் உடல் நலம் தேறி வந்து எழுந்து நடக்கவே ஆரம்பித்தார். விபத்திற்கு பின் குணமாகி இருக்கும் யாஷிகா, தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் தான் கூட பிக் பாஸ் வீட்டிற்கு சென்று போட்டியாளர்களை உற்சாகபடுத்திவிட்டு வந்தார் யாஷிகா. இப்படி ஒரு நிலையில் யாஷிகா ஆனந்திற்கு ஏற்பட்ட விபத்தால் இவருக்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய பாலிவுட் வாய்ப்பு இழந்துள்ளதாக கூறியுள்ளார யாஷிகா.

-விளம்பரம்-

இந்தி பிக் பாஸில் கலந்துகொள்ளும் வாய்ப்பு :

அதாவது நடிகை யாஷிகா 2021 ஆம் ஆண்டின் பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தான் தேர்வு செய்யப்பட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தாம் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அதற்கு முன்பே ஜூலை மாதம் விபத்தில் சிக்கியதால் அந்த வாய்ப்பை தான் இழந்ததாகவும் யாஷிகா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

தமிழ் பிக் பாஸில் கலக்கிய யாஷிகா :

இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்களில் எத்தனையோ பெண் போட்டியாளர்கள் கலந்துகொண்டாலும் ஒரு சில பெண் போட்டியாளர்கள் மட்டுமே மிகவும் வலிமையான போட்டியாளர்களாக இருந்தனர். அதில் யாசிகாவும் ஒருவர். மேலும், இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட போது இவர் விளையாடிய டாஸ்க்குகளை பார்த்து பலரும் வியந்துபோயினர். ஆனால், இவரால் டாப் மூன்று இடத்தை பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Advertisement