ஓவியா 90Ml ஸ்டைலில் களமிறங்கிய யாஷிகா .! மீண்டும் ஒரு 18+ கதையில்.! டைட்டில் என்ன தெரியுமா.!

0
1835
Yashika-anand
- Advertisement -

கடந்த ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குக்கேற்று வலுவான போட்டியாளராகத் திகழ்ந்து, மக்கள் மனத்தை வென்றார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் மகத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினாலும், பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் இருவரும் நண்பர்களாகப் பழகி வருகின்றனர். பிக் பாஸிற்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சி, அடுத்தடுத்து ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

- Advertisement -

அந்தவகையில் யாஷிகா தற்போது 18+ என்ற புதிய வெப் சீரிஸில் நடிக்க துவங்கியுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இந்த படமும் அடல்ட் படம்தானா என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே இவர் இருட்டு அறை முருட்டு குத்து படத்தில் நடித்த போது பல்வேறு விமர்சனங்களை பலரும் முன் வைத்தனர். அதே போல சமீபத்தில் ஓவியா நடிப்பில் வெளியான ’90Ml’ படமும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் தற்போது யாஷிகாவும் அதே விமர்சனத்தில் சிக்குவார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement