கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா. தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்ற படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். நேற்று (ஜூன் 7) இவர் நடித்துள்ள ஜாம்பி படத்தின் டீஸர் ஒன்றும் வெளியாகி இருந்தது.
இதையும் படியுங்க : இது என்ன லோ பட்ஜெட் கீர்த்தி சுரேஷா.! வைரலாகும் டிக் டாக் வீடியோ.!
எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம். அதில் பெரும்பாலும் கவர்ச்சியான புகைப்படங்களாக தான் இருக்கும். இதனால் இவரை பின் தொடர்பவர்களும் அதிகமாகவே இருக்கின்றனர்.
சமீபத்தில் நடிகை யாஷிகா இரவு டின்னர் பார்ட்டிக்கு சென்றுள்ளார். அப்போது உணவகத்தின் வெளியே இருந்த விநாயகர் சிலைக்கு முன்பாக செருப்புகாளுடன் தொடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா. அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை கண்டு கடுப்பான ரசிகர்கள் சாமி சிலைக்கு முன்பு இப்படியா போஸ் கொடுப்பது என்று கழுவி ஊற்றி வருகின்றனர். இருப்பினும் யாஷிகாவின் பக்தர்களோ யாஷிகாவை திட்டி தீர்த்து வரும் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து தான் வருகின்றனர்.