விபத்து வீடியோவை கேட்ட ரசிகருக்கு கடுப்பாகி யாஷிகா கொடுத்த பதிலடி (சும்மா அதையே சொல்லினு இருந்தா)

0
450
yashika
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டது.

-விளம்பரம்-

அதே போல தன் உடல் நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது என்று கூறி இருந்தார்.

- Advertisement -

விபத்திற்கு பின் யாஷிகா :

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி உயிரிழந்தால் குற்ற உணர்ச்சிக்கு உள்ளானார் யாஷிகா. மேலும், விபத்திற்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும் வாழ்க்கை முழுதும் தன் தோழியை கொன்ற குற்ற உணர்வுடன் தான் இருப்பேன் என்றும் கூறி இருந்தார்.

கார் விபத்தால் பறிபோன வாய்ப்பு :

கிட்டதட்ட 4, 5 மாதங்கள் படுக்கையில் இருந்த யாஷிகா சமீபத்தில் தான் உடல் நலம் தேறி வந்து எழுந்து நடக்கவே ஆரம்பித்தார். விபத்திற்கு பின் குணமாகி இருக்கும் யாஷிகா, தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் தான் கூட பிக் பாஸ் வீட்டிற்கு சென்று போட்டியாளர்களை உற்சாகபடுத்திவிட்டு வந்தார் யாஷிகா. இப்படி ஒரு நிலையில் யாஷிகா ஆனந்திற்கு ஏற்பட்ட விபத்தால் இவருக்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய பாலிவுட் வாய்ப்பு இழந்துள்ளதாக கூறியுள்ளார யாஷிகா.

-விளம்பரம்-

அதாவது நடிகை யாஷிகா 2021 ஆம் ஆண்டின் பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தான் தேர்வு செய்யப்பட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தாம் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அதற்கு முன்பே ஜூலை மாதம் விபத்தில் சிக்கியதால் அந்த வாய்ப்பை தான் இழந்ததாகவும் யாஷிகா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேறி வரும் யாஷிகா அடிக்கடி தன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

விபத்து வீடியோவை கேட்ட நபர் :

சமீபத்தில் கூட புஷ்பா படத்தில் வந்த சூப்பர் ஹிட் பாடலான ‘வாயா சாமி’ பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படத்திற்கு நெட்டிசன் ஒருவர் ‘விபத்து வீடியோ அனுப்புறீங்களா, vibe போஸ்ட் போடனும்’ என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த யாஷிகா ‘நீ பிறந்த வீடியோவை அனுப்பு, Vibe செட் பன்றேன்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement