ஆண்களுக்காக நாங்கள் உடை அணியனுமா. இதற்கு ஏற்ற மாதிரி தான் நாங்க உடை அணிவோம் – யாஷிகா பதிவு.

0
1448
yashika
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது இளசுகளின் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் . தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தில் அறிமுகமானவர். அதன் பின்னர் துருவங்கள் பதினாறு, பாடம் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படம் தான்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-93.jpg

இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த யாஷிகா ஆனந்த், கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான்.

- Advertisement -

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஜோம்பி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி இவர் தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அப்டேட் செய்து கொண்டு இருப்பார். இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சி புகைப்படமாக தான் இருக்கும்.

இப்படி ஒரு நிலையில் நடிகை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்கள் குறித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார் அதில், ஆண்களுக்காக பெண்கள் உடை அணிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். எங்களுடைய நேரம் மேட்சிங் பேக் மேட்சிங் லிப்ஸ்டிக் போன்றவற்றிற்கு ஏற்றார் போலத்தான் உடை அணிகிறோம். இந்த லிஸ்டில் கூட நீங்கள் இல்லவே இல்லை. எனவே நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று குறிப்பிட்டிருக்கும் பதிவை யாஷிகா ஆனந்த் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement