யாஷிகாவுக்கு இவ்ளோ அழகான,பெரிய தங்கச்சி இருக்காங்களா..? வெளிவந்த புகைப்படம்..!

0
571
yashika-anand

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் யாஷிகா மீது வைத்திருந்த கண்மூடி தனமான காதல் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மஹத் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று தெரிந்தும் யாஷிகா, மஹத்தை காதலித்து அனைவர் மத்தியிலும் யாஷிகா மீது ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது.

yashika-sister

யாஷிகா மற்றும் மஹத்திற்கு இடையான காதல் குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். எனவே, யாஷிகா உண்மையில் எப்படிபட்ட குணமுடையவர், அவர் உண்மையில் மஹத்தை காதலிக்கிறாரா என்ற கேள்விகளுக்கு விடையளிக்க அவர்களது நண்பர்களிடம் கேட்டால் தெளிவு கிடைக்கும் என்று யாஷிகாவின் நண்பர்களிடம் பேட்டி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

அந்த பேட்டியின் போது மஹத் மற்றும் யாஷிகா இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதுகுறித்து யாஷிகாவின் நண்பர் ஒருவர் கூறியபோது, கண்டிப்பாக அவர்கள் இருவருக்கும் உள்ள நெருக்கம் நீண்ட நாள் நிலைக்காது என்று கூறியிருந்தார்.

yashika

அதே போல யாஷிகாவின் ஆண் நண்பர் ஒருவர் இதுகுறித்து பேசிய பேசிய போது , மஹத்திடம் நெருக்கமாக இருப்பதனால் அவர் மீது யாஷிகாவிற்கு காதல் ஏற்பட்டதாக பலரும் கூறுகின்றனர், ஆனால், உண்மையில் யாஷிகா அனைவரிடமும் அப்படி தான் இருப்பார்.

oshin

பிக் பாஸ் பாஸ் வீட்டில் எஜமான் டாஸ்கின் போது தான் மஹதிடம், யாஷிகா நெருக்கமாக நடந்து கொண்டார் என்று சொல்லுகிறார்கள். உண்மையில் அந்த இடத்தில் ஷாரிக் இருந்திருந்தலும், சென்ராயன் இருந்திருந்தாலும், பொன்னம்பலம் இருந்திருந்தாலும் அதே போல தான் யாஷிகா நடந்திருப்பார் என்று யாஷிகாவின் நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். இதிலிருந்து யாஷிகா, அனைவரிடமும் மிகவும் நெருக்கமாக பழகும் குணமுடையவர் என்று அவரது நண்பர்கள் கூறியுள்ளனர், ஆனால், மஹத் மீது ஏற்பட்டுள்ள காதல் எந்த அளவிற்கு உண்மை அல்லது இது வெறும் ஈர்ப்பு மட்டும் தானா என்பது தெரியவில்லை.