பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்ட வாரத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்னும் 6 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர். இதில் ஜனனி ஏற்கனவே இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ள நிலையில் நாளை இருவர் போட்டியில் இருந்து வெளியேற்றபட இருக்கின்றனர்.
இறுதி சுற்றிற்கு நெருங்கியதால் இந்த வாரம் முழுக்க போட்டியாளர்களுக்கு சில கடுமையான டாஸ்குக்கள் கொடுக்கப்பட்டது. மேலும், இந்த வாரம் போட்டியாளர் அனைவருக்கும் தனித்தனியாக டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்கில் வெற்றி பெறுவதை பொறுத்து அவர்களுக்கு மதிப்பெண்களும் வழங்கபட்டது.
இந்த வாரம் டாஸ்க் ஆரம்பித்த நாளில் இருந்தே யாஷிகா தான் அணைத்து டாஸ்க்கிலும் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்றுடன் இந்த டாஸ்க் முடிவடைந்த நிலையில் மற்ற போட்டியாளர்களைவிட யாஷிகா புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்.
இந்த வாரம் நடைபெற்ற அணைத்து டாஸ்கின் அடிப்படையில் யாஷிகா முதல் இடத்தை பிடித்தால் அவருக்கு 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை பிக் பாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பை கேட்டு யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் துள்ளி குதித்தனர். பிக் பாஸ் வரலாற்றிலே ஒரு டாஸ்கில் வெற்றி பெற்றதற்காக யாருக்கும் இவ்வளவு அதிக தொகை கொடுக்கப்பட்டது இல்லை. ஆனால், யாஷிகாவிற்கு மட்டும் பிக் பாஸ் எதற்காக இப்படிபட்ட சலுகையை அளித்துள்ளார் என்பது தான் தெரியவில்லை.