பிக் பாஸ் புகழ் ஹீரோ ஆரவ் அவர்கள் தற்போது பிசியாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட ஆரவ் நடிப்பில் வெளிவந்த படம் “மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்”. இந்த படத்தை பிரபல இயக்குனர் சரண் இயக்கி இருந்தார். இதில் ஆரவ்வுக்கு ஜோடியாக காவ்யா தபர் நடித்திருந்தார். ஆனால், இந்தப் படம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படவில்லை. இதனை தொடர்ந்து ஆரவ் அவர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “ராஜபீமா”. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை புது முக இயக்குனர் நரேஷ் சம்பத் என்பவர் தான் இயக்குகிறார். மேலும், சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் அவர்கள் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள்.

இப்படத்தில் நாசர், ஷயாஜி ஷிண்டே, கே.எஸ். ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தில் நடிகை ஓவியா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் ஓவியா–ஆரவ். அதோடு தற்போது கூட சமூக வலைத்தளங்களில் இவர்களுடைய மருத்துவ முத்தம் பேசப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்களிடம் இருந்து தொடங்கியது தான் இந்த காதல் காவியம். பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு ஓவியாவும், ஆரவ்வும் தனித்தனியாக தங்களுடைய வாழ்க்கையை பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Advertisement

பின் இவர்கள் இருவரும் பிசியாக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ஓவியா அவர்கள் இந்த ராஜபீமா படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். மேலும், இந்த படம் விக்ரம் பிரபுவின் கும்கி படத்தின் பாணியில் யானையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் ஆகும். இந்த படத்தில் நடிகர் ஆரவ் அவர்கள் யானை பாகனாக நடிக்கிறார். இதில் ஆரவ்விற்கு ஜோடியாக ‘கொலைகாரன்’ புகழ் அஷிமா நர்வால் நடிக்கிறார். சைமன் கே.கிங் இசையமைத்து உள்ளார். இந்த படத்திற்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்து உள்ளார், ‘கருந்தேள்’ ராஜேஷ் அவர்கள் திரைக்கதை-வசனம் இந்த படத்திற்கு எழுதி உள்ளார்.

தற்போது இந்த படத்தில் நடிகை யாஷிகா ஆனந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்து உள்ளது. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகை யாஷிகா. இதனை தொடர்ந்து மஹத்திற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் யாஷிகா . நடிகை யாஷிகா இந்த ராஜபீமா படத்தில் ஒரு செய்தியாளராக நடித்து உள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படம் பாலக்காடு, பொள்ளாச்சி, தாய்லாந்து என பல இடங்களில் படப்பிடிப்புகள் நடந்து உள்ளது.

Advertisement

இந்த ராஜபீமா படம் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் உள்ள உறவை பற்றி பேசுகிற படம் என்றும் கூறியுள்ளார்கள். இந்த படம் விலங்குகளை வைத்து அவற்றால் செய்ய முடியாத விஷயங்களை கூட செய்ய முடியும் என்று கூறும் கதையாகும். அதுமட்டுமில்லாமல் இந்த படம் காமெடி, சீரியஸான தோனியில் அமைந்து உள்ளது. இந்த படத்தை அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிட இருப்பதாகவும் அறிவித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் இணைந்து உள்ளார்கள் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

Advertisement
Advertisement