ரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக நடந்த யாஷிகா.! புகைப்படம்.!

0
768
yashika-anand
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கடத்தை நெருங்கியுள்ளதால் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் மிகவும் கடுமையாக மாறிக்கொண்டு இருக்கிறது. நேற்றய டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவருக்கும் மண் வாசனை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

Aishwarya

- Advertisement -

இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கோலா மாவு நிரப்பபட்ட தொட்டி ஒன்று கொடுக்கப்படும், அதை மற்ற போட்டியாளர்களிடமிருந்து பாதுகாத்து கோலமாவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் தொட்டியில் இருக்கும் கோலா மாவை எடுத்து வெளியில் கொட்டலாம்.

இதில் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடிய நிலையில் சிலருக்கு ரத்தக் காயம் கூட ஏற்பட்டது. வழக்கம் போல இந்த டாஸ்கில் ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் சேர்ந்து மற்ற போட்டியாளர்களின் கோலா மாவை குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனால் ஜனனியும், ரித்விகாவும், யாஷிகா வந்தால் தான் நீ வருவாயா உன்னால் முடிந்தால் தனியாக வா என்று ஐஸ்வர்யாவை கூறினார்.

-விளம்பரம்-

yashika

ஒரு கட்டத்தில் கடுப்பான ரித்விகா உனக்கு தைரியம் இருந்தால் வா, வா என்று சத்தம் போட்டுக் கொண்டு ஐஸ்வர்யாவை அழைத்தார். அதற்கு ஐஸ்வர்யா எனக்கு எப்போ தோணுதோ அப்போ வருவேன் என்று கூறினார்.இதுநாள் வரை சாந்தமாக இருந்த ரித்விகா நேற்றைய டாஸ்கில் கொஞ்சம் ஆக்ரோஷமாகவே காணப்பட்டார்.

viji

Aish

rithu

balaji

அதே போல இதுநாள் வரை தன்னை பலசாலியான போட்டியாளர் என்று சொல்லக்கொண்டிருந்த விஜயலட்சுமியை, யாஷிகா டாஸ்கில் புரட்டி போட்டு எடுத்தார். ஒரு கட்டத்தில் யாஷிகா, விஜயலட்சுமியை டார்கெட் செய்தார் , அப்போது இருவருமே மாறி, மாறி மற்றவருடைய தொட்டியில் இருக்கும் கோலமாவை குறைக்க முயற்சி செய்கையில் யாஷிகா, விஜயலட்சுமியை தள்ளிவிடுகிறார் இதனால் விஜிக்கு கொடுக்கப்பட்ட தொட்டி உடைவதோடு விஜிக்கு கையில் ரத்தம் வரும் அளவிற்கு அடிபட்டு விடுகிறது.இவ்வளவு ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்த டாஸ்க் இன்றும் தொடர்கிறது. இன்று யாருக்கு என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement