பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யுகேந்திரன் வாசுதேவனுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் யுகேந்திரனும் ஒருவர். இவர் தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான பின்னணி பாடகராகவும், நடிகராகவும் திகழ்ந்த மலேசியா வாசுதேவனின் மகன் ஆவார். மேலும், யுகேந்திரன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணிப் பாடகரும் ஆவார்.
இவர் இதுவரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். அதிலும் இவர் சில படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இவர் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும், இவர் படங்களில் குணசித்திர வேடங்களில் தான் நடித்து இருக்கிறார். அதிலும், குறிப்பாக இவர் தளபதி விஜயுடன் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார்.
யுகேந்திரன் குறித்த தகவல்:
பின் சில வருடங்களாகவே இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவரை குறித்து எந்த விவரமும் தெரியாமல் இருந்தது.அதற்குப்பின் இவர் தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் யுகேந்திரன்:
இந்த சீசனில் சில வாரங்கள் யுகேந்திரன் விளையாடிக் கொண்டு வந்திருந்தார். இவர் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து வெளியேறும் வரை நன்றாக தான் விளையாடியிருந்தார். இதனால் இவர் இறுதி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நான்காவது வாரத்திலேயே டபுள் எவிக்ஷனில் யுகேந்திரன் எலிமினேட் ஆனார். மேலும், நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தாலும் யுகேந்திரன் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து கொண்டு வருகிறார்.
யுகேந்திரன் நடிக்கும் படம்:
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சினிமாவில் மீண்டும் களம் இறங்குவார் என்று பலருமே எதிர்பார்த்தார்கள்.
இந்த நிலையில் நடிகர் யுகேந்திரனுக்கு ஜாக்பாட் அடித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதாவது, விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் தளபதி 68 படத்தில் தான் யுகேந்திரன் கமிட் ஆகி இருக்கிறார். இதற்கு முன்பே இவர் விஜய் உடன் சேர்ந்து சில படங்களில் நடித்திருந்தார். கடைசியாக திருப்பாச்சி படத்தில் யுகேந்திரன் நடித்திருந்தார்.
தளபதி 68 படம்:
அதற்கு பிறகு 18 வருடங்கள் கழித்து இவர் மீண்டும் விஜய் உடன் இணைந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வெங்கட் பிரபு- யுகேந்திரன் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்திற்கான 3d தொழில்நுட்பத்திற்கான லூக் டெஸ்ட் எடுக்கப்பட்டது