பிக் பாஸ் வீட்டில் கொடுத்த வாக்கு..! மனைவியுடன் நிறைவேற்றிய டேனி.! வெளியான புகைப்படம்

0
364
Daniel-Annie-Pope

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் டேனி, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மேலும் பரிட்சியமானார், தற்போது டேனி, நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “அறம் ” படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நைனார் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் வெளியேறிய அடுத்த வாரம் எலிமினேட் ஆனவர் டேனி. ஆரம்பத்தில் இவருக்கு நல்ல பெயர் இருந்தாலும் இடையில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் சற்று நெருக்கமாக இருந்து ஆளுக்கு ஏற்றார் போல நடந்து கொண்டதால் மக்கள் மத்தியில் சற்று வெறுப்பை சம்பாதித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து முதல் வேலையாக தனது நீண்ட வருட காதலியான டெனிஷாவை திருமணம் செய்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் டேனி இருந்த போது ஒரு தனியார் காப்பகத்தில் இருந்து ஆதரவற்ற குழந்தைகள் சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரிடமும் டேனி மிகவும் பாசமாக பழகியதோடு வெளியில் வந்ததும் கண்டிப்பாக உங்களை சந்திக்கிறேன் என்று அந்த குழந்தைகளுடன் கூறியிருந்தார்.

இதனை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் நிறுத்திக்கொள்ளமல் அந்த குழந்தைகளிடம் சொன்னது போலவே, சமீபத்தில் அந்த குழந்தைகள் இருக்கும் ஆசரமத்திற்கு தனது மனைவி டெனிஷாவுடன் நேரில் சென்று சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் மட்டும் பதிவிட்டுள்ளார் டேனி.